இயற்பியல் :: துகள் இயற்பியல் - பக்கம் - 2
11. குமிழ் அறையைப் புனைந்தவர் யார்? அதன் பயன் யாது?
இயற்பியாலார் டோனால்டு கிலேசர் 1953இல் புனைந்தார். இது துணை அடிப்படைத் துகள்களை பகுத்தறியப் பயன்படுவது.
12. அய்டிரஜன் குமிழறையைப் புனைந்தவர் யார்? அதன் பயன் யாது?
1954இல் லூயி வால்டர் ஆல்வரஸ் புனைந்தார். துணை அடிப்படைத் துகள்களால் உண்டாகும் வழிகளை இதில் காணலாம். தவிர, இவர் 1960இல் ஒத்ததிர்வு கண்டுபிடிப்பையும் நிகழ்த்தினார்.
13. ஹாட்ரன் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்? ஏன்?
என்.எல்.பி. ஒக்கன் அறிமுகப்படுத்தினார். முன்னணுக்கள், அல்லணுக்கள், பையான்கள், கேயான்கள் ஆகிய வலு அணுக்கரு விசை கொண்ட துகள்களால் பாதிக்கப்படும் துகள் தொகுதியைக் குறிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.
14. லெப்டான் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஆபிரகாம் வாய்ஸ், சி. மோலர், 1946.
15. இரு மீசான் கொள்கையை மீண்டும் கண்டறிந்தவர்கள் யார்?
ஆர். மர்ஷக், ஹேன்ஸ் பெவதே, எஸ்.சாக்கட்டா, டி. இனோயு ஆகியவர்கள் கண்டறிந்தனர்.
16. மீசானின் தற்காலப் பெயர் என்ன?
தற்காலப் பெயர் மியுயான்.
17. பையானைக் கண்டுபிடித்தது யார்?
1935இல் ஹைடகி யுகாவா கண்டறிந்தார். இவர்
ஜப்பானிய அறிவியலார்.
18. இதைப் பிரித்தவர்கள் யார்?
செசில் பிராங்க் பவல் மற்றும் அவர்தம் குழுவினர் பிரித்தனர்.
19. எதிர்த்துகள் என்றால் என்ன?
ஒரே நிறையும் சுழற்சியும் கொண்ட துகள். ஆனால் எதிர்மின்னேற்றம் உள்ளது.
20. கருதுகோள் துகள் (குவார்க்) என்றால் என்ன?
கற்பனைத் துகள். அடிப்படைத் துகள்களின் கட்டுப் பொருளாக முன்மொழியப்பட்டுள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துகள் இயற்பியல் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யார், துகள், என்ன, அடிப்படைத்