இயற்பியல் :: துகள் இயற்பியல் - பக்கம் - 1

1. துகள் என்றால் என்ன?
சிறியதாக உள்ள அடிப்படைப் பகுதி, எ-டு. முன்னணு, அல்லணு, மின்னணு.
2. துகள் இயற்பியல் என்றால் என்ன?
ஒரு பொருளிலுள்ள துகள்களை ஆராயுந் துறை.
3. அடிப்படைத் துகள்கள் என்றால் என்ன?
பிரிக்க இயலாத துகள்கள். இவற்றிலிருந்து எல்லாப் பொருளும் உண்டாகிறது.
4. இத்துகள்களின் இயல்புகள் யாவை?
நிறை, மின்னேற்றம், சுழற்சி, அயன்மை, கவர்ச்சி ஆகியவை. இவை கிட்டத்தட்ட எண்ணிக்கையில் 17.
5. ஒரு சில அடிப்படைத் துகள் யாவை?
லெப்டான்கள், ஹாட்ரன்கள், பேரியன்கள், மீசான்கள், பெர்மியான்கள், போசன்கள்.
6. சில அடிப்படைத் துகள்களின் வியத்தகு பண்பை முன்மொழிந்தவர் யார்?
1964இல் முர்ரே ஜெல் -மான் என்பார் முன்மொழிந்தார்.
7. போசான் என்னும் துகள் யார் பெயரால் அமைந்தது?
இந்திய அணு அறிவியலார் எஸ்.என். போஸ் என்பவர் பெயரால் அமைந்தது.
8. ஒமேகா - சுழித்துகள் எங்குக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சிறப்பென்ன?
1964இல் அமெரிக்கப் புரூக்கவென் தேசிய ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெல்-மானின் எண்முறை வழியை இது உறுதி செய்தது.
9. துணை அடிப்படைத் துகள்களை வகைப்படுத்தும் எண்முறை வழியை உருவாக்கியவர் யார்?
1961இல் முர்ரே ஜெல்மானும் அவர்தம் குழுவினரும் உருவாக்கினர்.
10. முதல் துகள்முடுக்கியை அமைத்தவர்கள் யார்?
காக்ராப்ட், வாட்சன், 1929.
தேடல் தொடர்பான தகவல்கள்:
துகள் இயற்பியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - துகள், யார், அடிப்படைத், என்ன, என்றால்