இயற்பியல் :: துகள் இயற்பியல் - பக்கம் - 3
21. கருதுகோள் துகள் கருத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
1964இல் முர்ரே ஜெல்-மான், ஜார்ஜ் சிவிக் ஆகிய இருவரும் அறிமுகப்படுத்தினர்.
22. உயர் கருதுகோள் துகள்கள் இருப்பதற்குரிய சான்று எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது?
1994இல் பெர்மி தேசிய முடுக்கி ஆய்வகத்தில் சான்றுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
23. கவர்துகள் (Charm) என்றால் என்ன?
கருதுகோள் துகளில் நான்காவது. 1964இல் ஷெல்டன் கிளாஷோ, ஜேம்ஸ் டி பஜோர்கன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
24. ஸ்டான்போர்டு நீள்சார் முடுக்கி மைய ஆய்வுகளின் தன்மை என்ன?
கருதுகோள் துகள் என்னும் துகள்களால் ஹாட்ரன்கள் ஆகியவை என்பதற்கு இந்த ஆய்வுகள் அரவணைப்பாக உள்ளன.
25. ஒளியன் என்றால் என்ன?
மின்காந்தக் கதிர்வீச்சின் துகள். இக்கதிர்வீச்சின் சிப்பம் (குவாண்டம்) இத்துகளே.
26. முனைப்படுதிறன் என்றால் என்ன?
எளிதாக மின்னணு முகில் முனைப்படுதல்.
27. முனைப்படுதல் என்றால் என்ன?
குறுக்கலையில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதால் ஒரு தளத்திலேயே அதிர்வு தோன்றுதல். காட்டாக, மின்காந்தக் கதிர்வீச்சு என்பது குறுக்கலை இயக்கமே.
இ.10.
28. சிப்பம் (குவாண்டம்) என்றால் என்ன?
ஒரு வினைநிகழ் முறையில் உறிஞ்சப்படும் அல்லது விடுவிக்கப்படும் ஆற்றலின் திட்டமான அளவு.
29. சிப்ப மின்னியக்கவியல் என்றால் என்ன?
சிப்பவிசை இயல் நோக்கில் மின்னேற்றப் பொருளோடு மின்காந்தக் கதிர்வீச்சு எவ்வாறு வினைப்படுகிறது என்பதையும் மின்காந்தக் கதிர்வீச்சுப் பண்புகளையும் ஆராயுந்துறை.
30. சிப்பநிற இயக்கவியலை (QCD) தொடங்கியவர் யார்? அதன் சிறப்பென்ன?
1972இல் முர்ரே ஜெல்-மான் என்பவர் தொடங்கினார். இத்தொடக்கம் கருதுகோள் துகள்களின் நிற விசைகளையும் அத்துகள்களில் மூன்று சுவைகளையும் இணைப்பது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துகள் இயற்பியல் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், கருதுகோள், மின்காந்தக், கண்டுபிடிக்கப்பட்டது, துகள்