முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 9
இயற்பியல் :: பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 9
![Object and Properties](images/object_and_properties.jpg)
81. ஆவியை எவ்வாறு நீர்மமாக்கலாம்?
வெப்பநிலை மாறாமல் அழுத்தத்தை அதிகமாக்கி இதை நீர்மமாக்கலாம்.
82. ஆவியாதல் என்றால் என்ன?
இம்முறையில் நீர்மம் அல்லது திண்மம் வெப்பத்தினால் வளி அல்லது ஆவிநிலைக்கு மாறுகிறது.
83. ஆவியாதல் நிகழ நிபந்தனைகள் என்ன?
பரப்பு அதிகமிருத்தல், நல்ல காற்றோட்டமிருத்தல், வெப்பநிலை சீராக இருத்தல்.
84. ஆவியழுத்தம் என்றால் என்ன?
நீர்மம் அல்லது திண்மத்தோடு சமநிலையிலிருக்கும் ஆவியின் அழுத்தம்.
85. டால்டன் ஆவியழுத்த விதிகளைக் கூறு.
1. ஒரு நீர்மத்தின் நிறையாவி அழுத்தம் பருமனைப் பொறுத்ததன்று. அதாவது, அது பாயில் விதிக்கு உட்பட்டதன்று.
2. ஓர் நீர்மத்தின் நிறையாவியழுத்தம் வெப்பநிலை உயர்வுக்கு நேர்வீதத்தில் இருக்கும்.
3. வேதிவினையாற்றாத வளிக்கலப்பினால் ஒரு நீர்மத்தின் நிறையாவி அழுத்தம் மாறுபடுவதில்லை.
4. பல நீர்மங்களால் ஏற்படும் நிறையாவி அழுத்தம் அவற்றின் தனித்தனி அழுத்தங்களின் கூடுதலாகும்.
5. வெவ்வேறு நீர்மங்களின் நிறையாவி அழுத்தம் வெவ்வேறு அளவுகளில் இருக்கும்.
86. பெர்சிலியஸ் கருதுகோள் என்றால் என்ன?
ஒரே வெப்ப அழுத்த நிலைகளில் பருமனளவுள்ள எல்லா வளிகளும் சம எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்டிருக்கும். வளிகளின் பருமனளவுகளுக்கும் அவைகளிலுள்ள அணுக்களுக்குமுள்ள உரிய தொடர்பை இக்கருதுகோள் கூறுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 9 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அழுத்தம், என்ன, நிறையாவி, நீர்மத்தின், அல்லது, என்றால், வெப்பநிலை