முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 1
இயற்பியல் :: பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 1

1. பொருள் என்றால் என்ன?
இடத்தை அடைத்துக் கொள்வதும் நிறை உள்ளதுமான பருப்பொருள். கண்ணால் பார்க்கவும் கூடியது. எ-டு. உலோகம்.
2. பொதுவாகப் பொருள் உள்ள மூன்று நிலைகள் யாவை?
திண்மம், நீர்மம், வளி.
3. பொருளின் நான்காம் நிலையாகக் கருதப்படுவது எது?
கணிம நிலை (பிளாஸ்மா).
4. கணிம நிலை என்றால் என்ன?
உயர் வெப்ப நிலையில் தடையிலா மின்னணுக்களும் அயனிகளும் உள்ள நிலை.
5. திண்மம் என்றால் என்ன?
கெட்டிப் பொருளே திண்மம்.
6. திண்மத்தின் பண்புகள் யாவை?
1. துகள்கள் நெருக்கமாக இருக்கும். 2. வடிவத்தை மாற்றுவதை எதிர்ப்பது.
7. பாய்மம் என்றால் என்ன?
வளியும் நீர்மம் சேர்ந்தது.
8. நீர்மம் என்றால் என்ன?
நீருக்கும் வளிக்கும் இடைப்பட்டது. எ-டு. எண்ணெய்.
9. நீர்மத்தின் பண்புகள் யாவை?
1. ஒடக்கூடியது. 2. தன் மட்டத்தை அடைவது.3. வடிவம் கலத்தைப் பொறுத்தது. 4. ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது.
10. நீர்மத்தைத் துல்லியமாக அளக்கும் கருவிகள் யாவை?
பூரட் பிப்பெட்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், யாவை, நிலை, நீர்மம், திண்மம்