முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 2
இயற்பியல் :: பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 2
11. நீரியல் என்றால் என்ன?
நீரின் தோற்றம் பண்புகள் முதலியவற்றை ஆராயும் துறை.
12. நீராற்பகுப்பு என்றால் என்ன?
நீரைச்சேர்த்து அரிய பொருள்களை எளிய பொருள்களாகப் பிரித்தல்.
13. பர்னவுலி தேற்றம் என்றால் என்ன?
இயக்கத்திலுள்ள ஒரு நீர்மம் இயக்க ஆற்றல், நிலை ஆற்றல், அழுத்த ஆற்றல் ஆகிய மூன்றையும் பெற்றுள்ளது.
14. பர்னவுலி தவிர்ப்பு நெறிமுறை என்றால் என்ன?
நிலையாகவும் சுழற்சி இல்லாமலும் ஒரு நீர்மம் பாயும் பொழுது, அதன் வழியிலுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் அதன் மொத்த ஆற்றல் மாறாதது (1925).
15. ஆர்க்கிமெடிஸ் விதி யாது?
ஒரு பொருள் ஒரு பாய்மத்தில் அமிழ்வதால் ஏற்படும் தோற்ற எடை இழப்பு, அப்பொருளினால் விலக்கப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம்.
16. மிதத்தல் விதிகள் யாவை?
1. ஒரு பொருளின் அடர்த்தி நீர்மத்தின் அடர்த்தியை விடக் குறைவானால், அப்பொருள் அந்நீர்மத்தில் மிதக்கும். 2. ஒரு பொருள் ஒரு நீர்மத்தில் மிதக்கும் பொழுது, மிதக்கும் பொருளின் நிறை, அதனால் விலக்கப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம்.
17. மிதத்தல் விதியின் அடிப்படையில் அமைந்த கருவிகள் யாவை?
கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், நீர்மானி, பால்மானி.
18. நீர்மானி என்றால் என்ன?
நீர்மங்களின் ஒப்படர்த்தி காணப் பயன்படுவது.
19. பால்மானி என்றால் என்ன?
பாலின் துய்மையை அளக்கும் கருவி.
20. பாஸ்கல் விதியைக் கூறு.
அசைவற்று இருக்கும் ஒரு நீர்மத்தில் ஒரு புள்ளியில் ஏற்படும் அழுத்தம், அதன் ஏனைய புள்ளிகளுக்கும் சமமாகப் பரவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், ஆற்றல், மிதக்கும், நீர்மத்தின்