முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 4
இயற்பியல் :: பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 4
31. கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டுகளாய் இருப்பவை யாவை?
இழுமம், பால்மம், கரையம்.
32. நுண்புழைக் கவர்ச்சி என்றால் என்ன?
நுண்புழைத்திறன். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக நீர்மங்கள் தாமாகவே ஒடுங்கிய திறப்புகளில் உயரும் நிகழ்ச்சி. இம்முறையில் நீர்மங்கள் உயர்வது அவற்றின் அடர்த்தியையும் நுண்புழைத் திறனையும் பொறுத்தது.
33. இதன் பயன்கள் யாவை?
1. நிலத்தடி நீர் இத்திறனாலேயே மேலே உயருகிறது.
2. இந்நீரை அதிகம் உறிஞ்சித் தாவரங்கள் பயன்படுத்திக் கொள்பவை.
34. நுண்புழை நீர் என்றால் என்ன?
நுண்புழைக் கவர்ச்சியால் தாவரங்களில் ஏறும் நிலத்தடி நீர்.
35. இதன் பயன்கள் யாவை?
1. தாவரத் தண்டு வழியாக ஊட்டநீர் தாவரத்தில் மற்றப் பகுதிகளுக்குச் செல்லுதல்.
2. இந்நெறிமுறையில் தானே மைஉறிஞ்சும் பேனா, மை உறிஞ்சும் தாள், துவட்டும் பூத்துணித் துண்டுகள் எல்லாம் வேலை செய்கின்றன.
36. பரப்பு இழுவிசை என்றால் என்ன?
மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவர்ச்சி.
37. இவ்விசைக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
நீர் மேல் குண்டுசி, பிளேடு மிதத்தல்.
38. இழுவிசையைக் குறைக்கும் பொருள் என்றால் என்ன?
மேற்பரப்பு இழுவிசையைத் தாழ்த்தும் பொருள். எ-டு. சவர்க்காரம்.
39. உட்கவரல் என்றால் என்ன?
நீர்மம் அல்லது கெட்டிப்பொருள் வளியை உறிஞ்சும் முறை.
40. உட்கவர்மானி என்றால் என்ன?
வளிக் கரைதிறனை நீர்மங்களில் உறுதி செய்யும் கருவி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், நீர், யாவை