முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 6
இயற்பியல் :: பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 6

51. கிரகாம் விதி யாது?
வளியின் பரவு நேர் விரைவு, அதன் அடர்த்தியின் வர்க்கமூலத்திற்குத் தலைகீழ் வீதத்தில் உள்ளது. (1829)
52. இவ்விதியின் பயன் யாது?
விரவல் முறையில் ஓரிமத் தனிமங்களைப் பிரிக்கப் பயன்படுகிறது.
53. விரவல் என்றால் என்ன?
அணுத் துகள்கள் வெப்ப இயக்கத்தால் தம்மிடத்தை விட்டு நகர்தல். அணுக்கள் என்பவை வளி, நீர்மம், திண்மம் ஆகியவற்றைக் குறிக்கும்.
54. விரவலுக்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.
நீரில் ஒரு துளி மை மெதுவாகப் பரவுதல்.
55. விரவல் எக்கி என்றால் என்ன?
அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படும் வெற்றிட எக்கி.
56. வளி விதிகள் யாவை?
1. பாயில் விதி : நிலையான வெப்பநிலையில் ஒரு மாதிரியின் அழுத்தம் (P) அதன் பருமனுக்கு (V) எதிர்வீதத்தில் இருக்கும். PV = மாறிலி.
2. சார்லஸ் விதி : நிலையான அழுதத்தில் வெப்ப இயக்க வெப்பநிலைக்குப் (T) பருமன் (V) நேர்வீதத்தில் இருக்கும். V/T = மாறிலி.
3.அழுத்த விதி : நிலையான பருமனிலுள்ள ஒரு மாதிரியின் வெப்ப இயக்க வெப்பநிலைக்கு, அழுத்தம் நேர் வீதத்திலிருக்கும்.
இம்மூன்று விதிகளையும் அனைத்துச் சமன்பாட்டில் ஒன்றாக இணைக்கலாம். PV = nRT.
n = மாறிலியிலுள்ள வளியளவு. R = வளி மாறிலி.
P = அழுத்தம். T= வெப்பநிலை.
57. வளி இயக்க விதிகள் யாவை?
இவற்றின் அடிப்படைப் புனைவுகளாவன.
1. அனைத்து வளிகளும் மூலக்கூறுகள் என்னும் துகள்களால் ஆனவை.
2. வளிமூலக்கூறுகள் நிலையாக நில்லாமல் எல்லாத் திசைகளிலும் தொடர்ந்து முடிவின்றி ஒழுங்கற்ற முறையிலேயே இங்குமங்குமாக இயங்கும்.
3. வளிமூலக்கூறுகள் இயங்கும் பொழுது ஒன்றுடன் ஒன்றும் ஒன்றுடன் மற்றொன்றும் மோதிக் கொள்கின்றன. தவிரக் கலன்களின் சுவர்களிலும் மோதுகின்றன.
4. வளி மூலக்கூறுகள் மீள்தன்மை உடையவை. ஆகவே, மோதல் காரணமாக அவற்றில் இயக்க ஆற்றல் இழப்பில்லை.
5. வளிமூலக்கூறுகள் கலன் கவர்களில் விசையுடன் மோதுவதால் ஏற்படும் விளைவே வளியழுத்தமாகும்.
6. வளிமூலக் கூறுகளின் இயக்க ஆற்றல் வளி வெப்ப நிலையுடன் நேர்வீதத் தொடர்புடையது.
7. வளிநிலையில் மூலக்கூறுகளுக்கிடையே குறிப்பிடத் தக்க அளவு கவர்ச்சி இல்லை ஆதலால், மூலக்கூறுகள் கட்டுப்பாடின்றி இயங்குகின்றன.
8. வளியின் கலப்பருமனோடு ஒப்பிடும்போது, மூலக் கூறுகளின் பருமன் மிகக் குறைவு ஆதலால், அதைப் புறக்கணிக்கலாம்.
58. வளி இயக்க விதிகளை யார் வகுத்தது? எப்பொழுது?
இவ்விதிகளை ஜேம்ஸ் கிளார்க் 1860இல் வகுத்தார்.
59. நிறை என்றால் என்ன?
ஒரு பொருளிலுள்ள அணுக்களின் தொகுதி. எங்கும் ஒரே அளவாக இருக்கும்.
60. எடை என்றால் என்ன?
ஒரு பொருளில் ஏற்படும் புவிஈர்ப்பு விசையின் அளவு. இடத்திற்கிடம் மாறுபடுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 6 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இயக்க, என்ன, வெப்ப, என்றால், மூலக்கூறுகள், வளிமூலக்கூறுகள், மாறிலி, நிலையான, விதி , விரவல், அழுத்தம், இருக்கும்