முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 5
இயற்பியல் :: பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 5

41. வெளிக்கவரல் என்றால் என்ன?
ஒரு நீர்மம் அல்லது திண்மத்தின் மேற்பரப்பில் மற்றொரு பொருளின் அணு அல்லது மூலக்கூறு படியும் முறை. பரப்பூன்றல் என்றும் கூறலாம்.
42. வெளிக்கவரி என்றால் என்ன?
வெளிக்கவரலை நிகழ்த்தும் பொருள்.
43. பாகியல் எண் என்றால் என்ன?
இயங்கு நீர்மத்தில் நேர்விரைவு வாட்டத்தை நிலை நிறுத்த, ஓரலகு பரப்பின் மீது செயல்பட வேண்டிய தொடு கோட்டுவிசை அந்நீர்மத்தின் பாகியல் எண் ஆகும்.
44. பாகுநிலைமானி என்றால் என்ன?
பாகுநிலையை அளக்கப் பயன்படும் கருவி.
45. அடர்த்தி என்றால் என்ன?
ஒரு கன செண்டிமீட்டர் பொருளின் நிறை. அலகுண்டு. பாதரசத்தின் அடர்த்தி 13.6 கி/க.செ.மீ
46. ஒப்படர்த்தி அல்லது அடர்த்தி எண் என்றால் என்ன?
ஒரு பொருளின் அடர்த்திக்கும் நீரின் அடர்த்திக்கும் உள்ள வீதம். அலகில்லை ஒரு எண். பாதரசத்தின் அடர்த்தி எண் 13.6.
47. ஒப்படர்த்திக்கு நீர் ஏன் ஒப்பீட்டுப் பொருளாகக் கொள்ளப் பட்டுள்ளது?
நீரின் அடர்த்தி எண் 1 அல்லது ஒரு கன செண்டி மீட்டர். நீரின் எடை ஒரு கிராம். எளிதில் கிடைப்பது.
48. ஒர் இரும்புத் துண்டு நீரில் அமிழ்கிறது. பாதரசத்தில் மிதக்கிறது. ஏன்?
இரும்புத்துண்டின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட அதிகம். நீரில் மூழ்குகிறது. அது பாதரசத்தை விட அடர்த்தி குறைவாக இருப்பதால் அதில் மிதக்கிறது.
49. வளி என்றால் என்ன?
திட்டமான எல்லைகளோ பருமனோ இல்லாத காற்று போன்ற பொருள். எ-டு ஆக்சிஜன், அய்டிரஜன்.
50. கே லூசக் விதி யாது?
வளிகள் வினைப்படும் பொழுது, அவற்றின் பருமனும் வினையால் விளைந்த வளிப் பருமனும் ஒரே வெப்ப அழுத்த நிலைகளில் சிறிய முழுஎண் வீதத்தில் இருக்கும் (1804).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருளும் பொருளின் பண்புகளும் - பக்கம் - 5 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அடர்த்தி, நீரின், அல்லது, பொருளின்