இயற்பியல் :: காந்தவியல் - பக்கம் - 6
51. புவிக்காந்தம் என்றால் என்ன?
புவியோடு தொடர்புடைய காந்தப் புலத்தை ஆராயுந் துறை. புவியே ஒரு காந்தமாகும்.
52. சுழல் காந்த வீதம் என்றால் என்ன?
ஒர் அணுவின் காந்தத் திருப்புத் திறனுக்கும் அதன் கோண உந்தத்திற்கும் உள்ள வீதம்.
53. சீமன் ஆற்றல் என்றால் என்ன?
பயன்படும் காந்தப்புலத்திற்கும் மூலக்கூறு காந்தப் புலத்திற்கும் இடையே ஏற்படும் வினையினால் உண்டாகும் ஆற்றல்.
54. சீமன் விளைவு என்றால் என்ன?
நிலைக் காந்தப்புலத்தில் மூலக்கூறுகள் அல்லது அணுக்களில் உமிழப்படும் கதிர்வீச்சிலுள்ள வரிகள் பிரிக்கப்படுதல். இது 1896இல் சீமன், லாரண்ட்ஸ் ஆகிய இருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
55. காந்தப் பண்புகளையும் மின் பண்புகளையும் ஆராய்ந்தவர் யார்?
வில்லியம் கில்பெர்ட்
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்தவியல் - பக்கம் - 6 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, சீமன், காந்தப்