இயற்பியல் :: காந்தவியல் - பக்கம் - 3
21. கடினக் காந்தப் பொருள்கள் என்பவை யாவை? இவற்றின் பயன் யாது?
ஏற்புத் திறனும் காப்புத் திறனும் உள்ள பொருள்கள் இவை. இவற்றைக் கொண்டு வலிமை மிக்க காந்தங்கள் செய்யலாம். எ-டு. அல்நிக்கோ.
22. காந்தக் கசிவுத்திறன் வகைகள் யாவை?
தனிக் கசிவுத்திறன், சார்புக் கசிவுத்திறன்.
23. தனிக் கசிவுத்திறன் என்றால் என்ன?
ஒரு பொருளின் காந்தப் பரவு அடர்த்திக்கும் (B), புறக் காந்த வலிமைக்கும் (H) உள்ள வீதம். μ= B/H. அலகு ஹென்றி/மீட்டர் (Hm-1)
24. சார்புக் கசிவுத் திறன் என்றால் என்ன?
ஒரு பொருளின் சார்புக் கசிவுத் திறன் என்பது அதன்
தனிமக் கசிவுத் திறனுக்கும் வெற்றிடக் கசிவுத் திறனுக்குமுள்ள வீதம். ஆகவே, அது பருமனற்றது. μr = μ / μο
25. காந்த முனைகள் என்றால் என்ன?
காந்தத்திற்கு வடமுனை, தென்முனை என இரு முனைகள் உண்டு.
26. இம்முனை வலிமை என்றால் என்ன?
ஒத்த முனைகள் ஒன்றை மற்றொன்று விலக்கும். எதிர் முனைகள் ஈர்க்கும்.
27. காந்தமுனை வலிமை என்றால் என்ன?
வெற்றிடத்தில் ஓரலகு முனையிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருக்கும் பொழுது, ஒரு காந்த முனையினால் உண்டாகும் விசை.
28. காந்த அழுத்த வேறுபாடு என்றால் என்ன?
இது காந்த இயக்கு விசையாகும். மின்னியக்கு விசை போன்றது.
29. காந்தத்தடை என்றால் என்ன?
ஒரு காந்தச் சுற்றினால் முழுக்காந்த ஓட்டத்திற்கும் காந்த இயக்கு விசைக்கும் இடையே உள்ள வீதம். அலகு ஹென்றி மீட்டர்-1 (Hm-1)
30. இரும்புக்காந்தப் பொருள்கள் யாவை?
இவை இரும்புத் தொடர்பான பொருள்கள். இவற்றின் காந்தப் புல வலிமையை அதிகமாகக் காந்தத் தன்மையும் அதிகமாகும். எ-டு. இரும்பு, எஃகு நிக்கல், கோபால்டு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்தவியல் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, காந்த, கசிவுத்திறன், கசிவுத், பொருள்கள், முனைகள், மீட்டர், வீதம், சார்புக், யாவை, உள்ள, வலிமை, காந்தப்