இயற்பியல் :: காந்தவியல் - பக்கம் - 2
11. காந்த மூலங்கள் யாவை?
1. கிடைமட்டச் செறிவு.
2. சரிவுக் கோணம்.
3. விலக்கக் கோணம்.
12. காந்த நடுக்கோடு என்றால் என்ன?
சுழிச்சரிவின் புள்ளிகளைச் சேர்க்கும் கோடு.
13. காந்தப் புலம் என்றால் என்ன?
காந்த விசை உணரப்படும் பகுதி.
14. காந்தப்புலச் செறிவு என்றால் என்ன?
காந்தம் ஒன்றின் திருப்புத் திறனுக்கும் (M), அதன் பருமனுக்கும் (V) இடையிலுள்ள தகவு. அதன் காந்தச் செறிவு (J) ஆகும்.
15. காந்தப்பாயம் என்றால் என்ன?
ஒரு பரப்பு வழி அமையும் காந்தப் புல வலிமை ஒரு பரப்பு வழிச் செல்லும் காந்தத் திசைக் கோடுகளின் எண்ணிக்கை என்னும் கருத்தின் அடிப்படையில் அமைந்தது.
16. காந்தப்பாய அடர்த்தி என்றால் என்ன?
ஒரு காந்தப் புலத்தில் ஒரலகு செங்குத்துப் பரப்பில் ஏற்படும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை.
17. காந்தத்தூண்டல் என்றால் என்ன?
புறக் காந்தப் புலத்தினால் ஒரு பொருளைக் காந்த மாக்குதல்.
18. காந்த மையவரை என்றால் என்ன?
நிலவுலகின் மேற்பரப்பில் இரு காந்த முனைகளையும் சேர்க்கும் கோடு. உற்றுநோக்குபவர் வழியே செல்வது.
19. காந்தத்திருப்புத் திறன் என்றால் என்ன?
காந்த அச்சில் 90 இல் ஓரலகு புலத்தில் உற்று நோக்கப் படும் திருப்புவிசை.
20. காந்தச் சார்புத்திறன் என்றால் என்ன?
இத்திறன் எஃகிற்கு அதிகமுள்ளது; நிலைக் காந்தம் தேனிரும்பு குறைந்தது; தற்காலிகக் காந்தம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்தவியல் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், காந்த, காந்தப், காந்தம், செறிவு