இயற்பியல் :: காந்தவியல் - பக்கம் - 1

1. காந்தவியல் என்றால் என்ன?
காந்தவிசைப் புலன்களின் இயல்புகள், அவை உண்டாகக் காரணம், அவை எவ்வாறு பொருள்களைக் கவர்கின்றன என்பனவற்றை ஆராயும் இயற்பியல் பிரிவு.
2. காந்தம் என்றால் என்ன?
இரும்பைக் கவரப் கூடிய பொருள்.
3. காந்த வகைகள் யாவை?
1. சட்ட வடிவக் காந்தம் - காந்த ஆற்றல் குறைவு.
2. இலாட வடிவக் காந்தம் - காந்த ஆற்றல் அதிகம்.
இரண்டும் நிலைக் காந்தம்.
3. மின்காந்தம் - தற்காலிகக் காந்தம்.
4. காந்த அச்சு என்றால் என்ன?
ஒரு காந்தத்தின் இரு முனை மையங்கள் வழியாகச் செல்லுங் கோடு.
5. காந்தச் சுற்று என்றால் என்ன?
காந்த விசைக் கோடுகளால் உண்டாக்கும் மூடிய வழி. எ-டு. இலாட காந்தம்.
6. காந்தத் திசைகாட்டி என்றால் என்ன?
காந்த விசைப் புலத் திசையைக் காட்டும் கருவி.
7. காந்த மாறிலி என்றால் என்ன?
தடையிலா வெளியின் கசிவுத் திறன்.
8. காந்தவிலக்கம் என்றால் என்ன?
புவிமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் காந்த முனை வழிவட்டத்திற்கும் புவிமுனை வழிவட்டத்திற்கும் இடையிலுள்ள கோணம்.
9. காந்தச்சரிவு என்றால் என்ன?
புவிமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் புவிக் காந்தப் புலத்திற்கும் காந்தச் சரிவிற்கும் இடையிலுள்ள கோணம்.
10. காந்த இருமுனை என்றால் என்ன?
சட்டக் காந்தத்திலுள்ளது போன்று சிறிது தொலைவிலுள்ள வடமுனை தென்முனை நாடும் காந்த முனைகள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்தவியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - காந்த, என்ன, என்றால், காந்தம்