இயற்பியல் :: காந்தவியல் - பக்கம் - 5
41. குயூரி விதி யாது?
துணைக் காந்தப் பொருளின் காந்த ஏற்புத்திறன், தனி வெப்ப நிலைக்கு எதிர்வீதத்திலுள்ளது.
42. குயூரி வெப்பநிலை என்றால் என்ன?
கொடுக்கப்பட்ட இரும்புக் காந்தப் பொருளின் வெப்ப நிலை.அதற்கு மேல் அது துணைக் காந்தப் பொருளாகும்.
43. இயல்பு வெப்பநிலை என்றால் என்ன?
காந்த ஏற்புத்திறன் இயல்பாகும் வெப்பநிலை.
44. காந்தத் தயக்கம் என்றால் என்ன?
காந்தப் பின்னடைவு. இரும்புக் காந்தப் பொருள்கள் தாம் காந்தம் பெறும் பொழுதும் நீங்கும்பொழுதும் கொள்ளும் நடத்தை.
45. தற்காலிகக் காந்தங்களுக்கு எத்தகைய பொருள்கள் தேவை?
குறைந்த காந்த நீக்குவிசையும் குறைந்த காந்தத் தயக்க ஆற்றல் இழப்பும் கொண்ட பொருள்கள் தேவை. இதற்குத் தேனிரும்பு நன்கு பயன்படுவது.
46. மின்னியக்கி மாற்றிகளிலுள்ள உள்ளகங்களுக்கு எப்படிப் பட்ட பொருள்கள் தேவை?
இவற்றிற்குக் குறைந்த ஆற்றல் இயல்புள்ள பொருள்கள் தேவை. இவைகளிலும் தேனிரும்பு பயன்படுவது.
47. காப்பிகள் என்றால் என்ன?
நிலையான காந்த முனைகளுக்கிடையே வைக்கப்படும் தேனிரும்புத் துண்டுகள். இவை காந்த ஆற்றல் நிலையாக இருக்கப் பயன்படுபவை.
48. மாக்ஸ்வெல் தக்கைத் திருகுவிதி என்பது யாது?
இது காந்த விதிகளில் ஒன்று. கடத்தியில் மின்னோட்டம் எத்திசையிலுள்ளோ அத்திசையில் ஒரு வலஞ் சுழித் தக்கைத் திருகைப் பயன்படுத்தித் திருகுவதாகக் கற்பனை செய்து கொள்க. இப்பொழுது கையின் கட்டைவிரல் எத்திசையில் திரும்புகிறதோ அத்திசையில்தான் காந்த விசைக் கோடுகள் அமையும்.
49. காந்தச் செறிவாக்கம் என்றால் என்ன?
காந்தம் ஒன்றின் திருப்புத்திறனுக்கும் (m) அதன் பருமனுக்கும் (v) இடையே உள்ள வீதம்.
50. அரும்புவிக் காந்தங்கள் என்பவை யாவை?
இவை மிகச் சிறியவை. ஆற்றல் உள்ளவை. பாதுகாப்புத் துறை. வானவெளித்துறை, மருத்துவம், உந்திகள் கொக்கிகள் ஆகியவற்றில் பயன்படுபவை (1995).
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்தவியல் - பக்கம் - 5 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - காந்த, பொருள்கள், காந்தப், என்ன, என்றால், ஆற்றல், தேவை, வெப்பநிலை, குறைந்த