இயற்பியல் :: காந்தவியல் - பக்கம் - 4
31. காந்த ஏற்புத்திறன் என்றால் என்ன?
பயன்படுத்திய காந்தப் புல வலிமைக்கும் காந்தமாக் கலுக்கும் உள்ள வீதம்.
32. காந்த ஏற்புத்திறன் அதிகமுள்ளது எது?
தேனிரும்பு.
33. காந்த ஏற்புத்திறன் எதற்குக் குறைவு?
எஃகு.
34. காந்த மாறுபாடு என்றால் என்ன?
நிலவுலகின் மேற்பரப்பில் ஒரு புள்ளியில் காந்த
மூலங்களில் ஏற்படும் பலமாற்றங்கள். இது காலத்திற் கேற்ப மாறுபடும்.
35. காந்தவழிப் பிறப்பி என்றால் என்ன?
எந்திரங்களின் பற்று ஏற்பாடுகளில் உயர் அழுத்தம் மூலமாகப் பயன்படும் மாறுதிசை மின்னோட்டப் பிறப்பி.
36. காந்தமானி என்றால் என்ன?
ஒரு வகைக் காந்தத் திசைக்காட்டி, காந்தப் புலங்களை ஒப்பிடப் பயன்படுவது.
37. காந்தமானியின் வகைகள் யாவை?
விலகு காந்தமானி, அதிர்வு காந்தமானி.
38. காந்தவெளி என்றால் என்ன?
இது புவியைச் சுற்றிலும் சுமார் 3000 கி.மீக்கு மேல் ஒரு இலட்சம் கி.மீ. வரையில் பரவியுள்ளது.
39. மூவகைக் காந்த நிகழ்ச்சிகள் யாவை?
1. இரு முனைக் காந்தம்.
2. ஒரு போக்குக் காந்தம்.
3. ஒரு போக்கில்லாக் காந்தம்.
40. பார்னட் விளைவு என்றால் என்ன?
காந்தமிலாக் கோல் ஒன்று, தன் அச்சைச் சுற்றி உயர்விரைவில் சுழலும்போது, அதில் சிறிது காந்த ஆற்றலை உண்டாக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்தவியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - காந்த, என்ன, என்றால், காந்தம், காந்தமானி, ஏற்புத்திறன்