முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 7
இயற்பியல் :: இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 7
61. நீரோட்ட இயக்கம் என்றால் என்ன?
பொதுவாக, நீர்மம் ஒன்று பாயும்பொழுது, அதன் ஒவ்வொரு புள்ளியிலுள்ள விரைவு மாறாத ஒன்று. ஒவ்வொரு துகளும் அதற்கு முன் செல்லும் துகளின் வழியிலும் அதே நேர்விரைவுடனும் செல்லும். இந்த இயக்கம் கட்டுப்பாட்டிற்குரியது.
62. விசையாழி என்றால் என்ன?
காற்று, நீர், நீராவி முதலியவற்றின் உந்துதலால் இயக்கப்படும் ஊர்தி.
63. இதன் வகைகள் யாவை?
காற்றாழி, நீராழி, நீராவியாழி.
64. விசையாழி இயற்றி என்றால் என்ன?
இது ஒரு மின்னியற்றியை இயக்கும் நீராவி விசையாழி ஆகும்.
65. காற்றாற்றல் என்றால் என்ன?
வீசும் காற்றின் ஆற்றல் அதன் திசை விரைவின் மும்மடிக்கு நேர்வீதத்திலிருக்கும். புவி மேற்பரப்பில் வீசும் காற்றின் மூலம் 10mw ஆற்றல் விலையின்றிக் கிடைக்கிறது. தகுந்த கருவிகளைக் கொண்டு இந்த ஆற்றலை எந்திரஆற்றலாக்கலாம். இதற்குக் காற்றாடி எந்திரம் பொதுவாகப் பயன்படுவது.
66. மீவிரை மையவிலக்கி என்றால் என்ன?
மீ விரை மைய விலகு விசையால் மிகச் சிறிய துகள்களைப் பிரிக்கப் பயன்படும் கருவி.
67. காற்றாலை என்றால் என்ன?
இதில் இயங்குமாற்றல் காற்று. தகட்டுத் தொகுதி களாலான காற்றாடி சுற்றி இயக்கத்தை அளிக்கும். நீர் இறைக்கவும் தானியங்களை அறைக்கவும் மின் உற்பத்தி செய்யவும் பயன்படுவது.
68. ஒருசீர் இயக்கம் என்றால் என்ன?
ஒரு பொருள் சமஅளவு காலங்களில் சமஅளவு இடப்பெயர்ச்சி அடைதல்.
69. வெற்றிடத் தேக்கி என்றால் என்ன?
ஒரு கொள்கலத்திலுள்ள வளியழுத்தத்தை குறைக்கப் பயன்படும் குழாய்.
70. திறப்பி (வால்வு என்றால் என்ன?
ஓர் உறுப்பு அல்லது எந்திரத்தில் ஒரு பக்கம் மட்டுமே திறக்கும் அமைப்பு. எ-டு. கனற்சி எந்திரத்தில் உள்விடு, வெளிவிடு திறப்பிகள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 7 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், விசையாழி, இயக்கம்