முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 3
இயற்பியல் :: இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 3
21. ஆற்றல் வடிவங்கள் யாவை?
வேதியாற்றல், வெப்பஆற்றல், மின்னாற்றல், காந்தஆற்றல்.
22. ஆற்றலின் சிறப்பு யாது?
ஒர் ஆற்றல் மற்றோர்ஆற்றலாக மாறவல்லது. எ-டு. மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக அல்லது எந்திர ஆற்றலாக மாறவல்லது; அழியாதது.
23. ஆற்றல் மாறா விதி என்றால் என்ன?
ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ இயலாது. ஒரு வகை ஆற்றல் மறைவின்றிச் சிதறுமாயின், பிறிதொரு வகையில் அது வெளித் தோன்றும். இவ்விதியை 1748இல் மிக்கல் லோமனசவ் வகுத்தார்.
24. உந்தம் என்றால் என்ன?
ஒரு பொருளின் இயக்க அளவு. அதன் நிறையையும் விரைவையும் பெருக்கி வரும் தொகைக்குச் சமம். P = mxV. P- உந்தம்,
m- நிறை.
v- நேர் விரைவு.
25. உந்தம் மாறாக் கொள்கை என்றால் என்ன?
இரு பொருள்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதும் பொழுது, மோதலுக்குப் பின் மொத்த உந்தமானது மோதலுக்கு முன்னிருந்த மொத்த உந்ததத்திற்குச் சமம்.
26. வட்ட இயக்கம் என்றால் என்ன?
வளைவழி ஒன்றில் செல்லும் துகளின் இயக்கம். மைய நோக்குவிசை, மைய விலக்குவிசை இவ்வியக்கம் சார்ந்தவை.
27. மையநோக்கு விசை என்றால் என்ன?
வட்டப்பரிதி வழிச் செல்லும் துகள்மீது வட்ட மையத்தை நோக்கிச் செயற்படும் விசை. இது வட்ட இயக்கம் சார்ந்தது.
28. இவ்விசைக்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.
கயிற்றில் கட்டப்பட்ட கல். சுழற்சியில் கயிற்றில் உருவாகும் விசை மையநோக்குவிசை,
29. மைய விலக்கு விசை என்றால் என்ன?
மையம் நோக்கியுள்ள முடுக்கத்தில் சுழலும் பொருள் ஒன்று தன் நிலைமத்தினால் உண்டாக்கும் தடை இது மையநோக்கு விசைக்குச் சமமானதும் எதிரானதுமாகும்.
30. மைய விலக்கு விசையைத் தகுந்த எடுத்துக்காட்டால் விளக்குக.
கிடைமட்டமாகச் சுற்றும் கல்லில் மையத்தைவிட்டு வெளியே இழுக்கும் விசை. வட்ட இயக்கம் சார்ந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, விசை, இயக்கம், ஆற்றல், வட்ட, உந்தம்