முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 2
இயற்பியல் :: இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 2
11. நேர்க்கோட்டு இயக்கம் என்றால் என்ன?
கவண்கல் இயக்கம்.
12. வட்ட இயக்கம் என்றால் என்ன?
நூல் கட்டி கயிற்றைச் சுற்றுதல்.
13. அதிர்வுறு இயக்கம் என்றால் என்ன?
சுருள்வில்லின் இயக்கம்.
14. நியூட்டன் ஈர்ப்பாற்றல் விதியைக் கூறு.
பருப்பொருள் ஒன்றின் ஒவ்வொரு பகுதியும் விண்ணகத் திலுள்ள பொருள் ஒன்றின் மற்றொரு பகுதியை ஈர்க்கும் விசை, அதன் நிறைக்கு நேர்வீதத்திலும், தொலைவின் வர்க்க மூலத்திற்கு எதிர்வீதத்திலும் இருக்கும்.
15. நியூட்டனின் இயக்க விதிகள் யாவை?
1. ஒரு நேர்க்கோட்டில் ஒரு பொருள் தன்சீரான இயக்கத்திலோ அசைவற்ற நிலையிலோ தொடர்ந் திருக்கும். புறவிசையினால் மாற்றப்படாதவரை அது தொடர்ந்திருக்கும்.
2. உந்தத்தின்மாறுமளவு அதன்மீது உண்டாகிய விசைக்கு நேர்வீதத்தில் அமைந்து விசைத்திசை நோக்கியே இருக்கும்.
3. ஒவ்வொரு வினைக்கும் சமமானதும் எதிரானதுமான ஒரு வினை உண்டு. (ஏவுகணை இயங்குதல்)
16. வேலை என்றால் என்ன?
ஒரு விசை ஒரு பொருளின் மீது செயற்படுங் காலை, அப்பொருள் அவ்விசையின் திசையில் நகருமானால் வேலை நடைபெறும். வேலை நடைபெற ஆற்றல் மாற்றம் தேவை.
W = maS.
W - வேலை
m - நிறை
a - முடுக்கம்.
S - தொலைவு.
சார்பிலி அலகு எர்க்கு.
புவி ஈர்ப்பு சார்ந்த அலகு செண்டிமீட்டர் கிராம்.
நடைமுறை அலகு ஜூல்.
17. ஆற்றல் என்றால் என்ன?
ஒரு தொகுதியின் பண்பும் அதன் வேலை செய்யும் கொள்திறனும் ஆகும். அலகு ஜூல்.
18. ஆற்றலின் இருவகைகள் யாவை?
இயக்க ஆற்றல், நிலையாற்றல்.
19. நிலையாற்றல் என்றால் என்ன?
தன் நிலை, வடிவம் ஆகியவற்றைப் பொறுத்து ஒரு பொருளில் தேங்கி இருக்கும ஆற்றல், எ-டு. தொட்டிநீர், நீர்த்தேக்கம்.
20. இயக்க ஆற்றல் என்றால் என்ன?
இயக்கத்தைத் தரும் ஆற்றல், எ-டு. அருவி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஆற்றல், வேலை, இயக்கம், அலகு, இயக்க