முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 4
இயற்பியல் :: இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 4
31. மைய விலக்கு விசையின் அடிப்படையில் அமைந்த கருவிகள் யாவை?
மைய விலக்குச் சுழல் கருவி; வாட்டின் ஆளி(கவர்னர்).
32. மையவிலக்கி என்றால் என்ன?
சுழற்சியால் ஒரு தொங்கலிலுள்ள பகுதிகளைப் பிரிக்கப் பயன்படும் கருவி. தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்தல்.
33. நிலைமம் என்றால் என்ன?
நியூட்டன் இயக்க விதியால் பெறப்படும் பொருளின் உள்ளார்ந்த பண்பு.
34. நிலைமத்தின் சிறப்பென்ன?
புறவிசை ஒன்று தாக்காத வரையில் ஒரு பொருள் அசைவற்ற நிலையிலோ நிலைத்த நேர்விரைவிலோ தொடர்ந்து இருக்கும். தன் நிலைமப் பண்பால் தானாகவே ஒரு பொருள் இயக்க மாற்றத்தைத் தடை செய்யும்.
35. நிலைமத்திருப்புத்திறன் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டிலிருந்து r தொலை விலுள்ள m என்னும் நிறையுடைய துகள் அக்கோட்டினை அச்சாகக் கொண்டு சுழலுமாயின் அத்துகளின் நிறை, நேர்க்கோட்டிலிருந்து அதன் தொலைவின் இருபடி ஆகியவற்றின் பெருக்கற்பலன் (mr²) நிலைமத் திருப்பு திறனாகும். இது ஒரு மாறிலி. அலகு மெட்ரிக் முறையில் கிராம் செமீ².
36. விசை இயக்கக் கொள்கை என்றால் என்ன?
பருப்பொருளின் இயற்பண்புகளை அதன் பகுதித் துகள்களின் இயக்கங்களைக் கொண்டு விளக்குவது. கவுண்டம்போர்டு, ஜேம்ஸ் ஜூல், ஜேம்ஸ் கிளார்க் ஆகிய மூவரும் சேர்ந்து உருவாக்கியது.
37. லிசாஜஸ் உருவங்கள் என்றால் என்ன?
ஒன்றுக்கொன்று செங்குத்தாகவுள்ள இரு தனிச்சீரிசை இயக்கங்களை ஒரு துகளின் மீது செலுத்தும்பொழுது ஏற்படும் தொகுபயன் இயக்கத்தை வரைவதால் கிடைக்கும் உருவங்கள். இவை தனிச்சீரிசை இயக்கங்களின் 1. வீச்சு, 2. அதிர்வெண், 3. வீதம் ஆகியவற்றைப் பொறுத்தது.
38. எந்திரவியல் என்றால் என்ன?
விசைப்பொறி இயல். பொறிகளின் எந்திர நுட்பத்தை ஆராயுந்துறை.
39. எந்திரம் என்றால் என்ன?
பொதுவாக, அளவில் பெரிதாகவும் ஒருவகை ஆற்றலை எந்திர ஆற்றலாக மாற்றும் கருவியமைப்பு. எ-டு. வெப்ப எந்திரம். இதன் ஆற்றல் குதிரைத் திறனில் இருக்கும்.
40. விசைமிதிவண்டி என்றால் என்ன?
பளுக்குறை உந்துவண்டி (மொபெட்).
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்