முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 5
இயற்பியல் :: இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 5
41. குதிகுடை என்றால் என்ன?
விண்குடை. குடை போன்ற அமைப்பு. வான வூர்தியிலிருந்து இறங்கவும் வானவெளிக்கலம் காற்று வழியாக மீளும்பொழுது தரையை அடையவும் பயன்படுவது.
42. எதிர்முடுக்கம் என்றால் என்ன?
இயங்குகின்ற பொருள் தடை ஏற்படும்பொழுது விரைவுத்தளர்ச்சி அடைகிறது. புவியிலிருந்து மேல்நோக்கி எறியப்படும் எப்பொருளும் புவிஈர்ப்பு விசையினால் விரைவுத் தளர்ச்சி அடையும். இதுவே எதிர்முடுக்கம் ஆகும்.
43. சுழலாழி என்றால் என்ன?
கனமான விளிம்புள்ள பெரிய உருளை எந்திரங்களில் நிலையான விரைவை அளிப்பது.
44. பல்லிணை என்றால் என்ன?
பல் உருளைகள் ஒன்றுடன் மற்றொன்று பொருந்திய அமைப்பு. சுற்றியக்கத்தை ஒரு தண்டிலிருந்து மற்றொரு தண்டிற்கு அளிப்பது. அதிக எந்திர இலாபம் கிடைக்கும். உந்துவண்டியின் பல்லிணைப் பெட்டி.
45. குண்டுத்தாங்கி என்றால் என்ன?
ஒர் அச்சைச் சுற்றிக் குண்டுகள் நிரம்பிய வளையம் அமைந்து சக்கரம் சுழல்வதை எளிதாக்குவது.
46. தடுப்பி என்றால் என்ன?
தடுப்புக்கட்டை பேருந்து முதலிய தாமியங்கிகளின் இயக்கத்தை நிறுத்தும் கருவியமைப்பு.
47. இதன் வகைகள் யாவை?
1. காற்றுத் தடுப்பி,
2. நீரியல்தடுப்பி,
3. வெற்றிடத்தடுப்பி.
4. தானியங்கும் தடுப்பி.
48. டி புரோக்ளி அலைநீளம் என்றால் என்ன?
ஒரு நகருந் துகளோடு தொடர்புள்ள அலையின் அலைநீளம். (1923)
49. இதை ஆய்வுச்சான்றோடு மெய்ப்பித்தவர்கள் யார்?
1927 இல் கிளின்டன் டேவிசன், ஜார்ஜ் தாம்சன் ஆகிய இருவரும் மெய்ப்பித்தனர்.
50. பணிச்சூழியல் என்றால் என்ன?
வேலை செய்வதற்கு எந்திரங்கள் மிக இணக்கமாக இருக்குமாறு செய்வதற்குரிய வழிவகைகளை ஆராயுந் துறை. போதிய வெளிச்சம், கருவியமையுந் தன்மை முதலியவை இதில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 5 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, தடுப்பி