இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 20
191. மின் உலோகவியல் என்றால் என்ன?
ஒரு உலோகத்தை அதன் தாதுவிலிருந்து மின்முறையில் பிரித்தல்.
192. உலர்நகலி என்றால் என்ன?
எழுத்து வடிவச் செய்தியை நகல் எடுக்கும் மின் கருவி யமைப்பு.
193. ஒளிர்தல் என்றால் என்ன?
ஆற்றலை உறிஞ்சி மின்காந்தக் கதிர்வீச்சுக்களை உமிழும் பொருளின் பண்பு.
194. இதற்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.
இருட்டறையில் பச்சையக் கரைசல் வழியாக ஒளியைச் செலுத்த, அக்கரைசலிலிருந்து நல்ல சிவப்பு நிற ஒளி நாலாத் திசைகளிலும் உமிழப்படும்.
195. வெண்ணொளிர்வு என்றால் என்ன?
உயர் வெப்ப நிலைகளில் மின் விளக்கு இழைகளில் உண்டாகும் ஒளி.
196. இருள் வெளி என்றால் என்ன?
மின்னிறக்குக்குழாயின் காற்றழுத்தத்தை 0.1 செ.மீ. அளவுக்குக் குறைக்கும் பொழுது ஊதாநிற நேர் மின்பிழம்பில் எதிர் மின்வாய்க்கருகில் ஓர் இருள் பகுதி தோன்றும். இதுவே பாரடே இருள் வெளி.
197. குரூக்ஸ் இருள்வெளி என்றால் என்ன?
அழுத்தத்தை 0.01 செ.மீ. அளவுக்குக் குறைக்கும் பொழுது எதிர் மின் பிழம்பு எதிர் மின்வாயிலிருந்து விடுபட்டு மற்றொரு இருள் பகுதி தோன்றும். இதுவே குரூக்ஸ் இருள்வெளி. இதில் மின்பிழம்பின் நீளம் குறைந்திருக்கும்.
198. மின் வில் என்பது என்ன?
மின்னோட்டம் செல்லும் பொழுது, மின்வாய்களுக் கிடையே ஏற்படும் ஒளிர் வெளி.
199. மின் நாற்காலி என்பது என்ன?
குற்றவாளிகளை உட்கார வைத்து மின்சாரத்தைச் செலுத்திக் கொல்லும் நாற்காலி. அமெரிக்கா முதலிய நாடுகளிலுள்ளது.
200. மின்மணி என்றால் என்ன?
மின்காந்தப் பயனுள்ள அழைப்பு மணி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 20 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், மின், இருள், எதிர், பொழுது, வெளி