இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 17
161. தொலைபேசி என்றால் என்ன?
மின்தூண்டல் நெறிமுறையில் வேலை செய்யும் தொலை தொடர்புக் கருவி.
162. இதைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?
கிரகாம் பெல், 1787.
163. கைத்தொலைபேசி என்றால் என்ன?
எவ்விடத்திலிருந்தும் ஒருவருடன் நேரிடையாகப் பேசக் கூடிய நடமாடும் தொலைபேசி. வானொலி அடிப்படை யில் வேலை செய்வது.
164. ஒலிப்பெருக்கி என்றால் என்ன?
மின்னோட்டங்களை ஒலியாக மாற்றுங் கருவி. ஒலி பெருக்கப்படுவதால் தொலைவில் கேட்கும்.
165. பிரித்தறிவி என்றால் என்ன?
மின்னோட்டத்தைப் பிரித்தறியும் கருவி.
166. வட்டுச்சங்கு என்றால் என்ன?
மின்சாரத்தால் தொழிற்சாலைகளிலும், பொது இடங்களிலும் இயங்குவது.
167. இடைமாற்றி (ரிலே) என்றால் என்ன?
வலுக்குறை மின்னோட்டத்தினால் வறுமிகு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துங் கருவி.
168. ஆற்றல்மானி என்றால் என்ன?
ஆற்றல், விசை, திறன் ஆகியவற்றை அளக்கும் கருவி.
169. விரைவுமானி என்றால் என்ன?
இயக்கத்தில் இருக்கும் ஒர் ஊர்தியின் விரைவைக் காட்டப் பயன்படுங் கருவி.
170. மின் உந்தி என்றால் என்ன?
மின்னாற்றலை எந்திர ஆற்றலாக மாற்றும் எந்திரம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 17 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கருவி