இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 15
141. மின்னோட்டமானி என்றால் என்ன?
சிறு அளவுள்ள மின்னோட்டங்களை அளக்கப் பயன் படுங் கருவி.
142. இதன் வகைகள் யாவை?
இயங்குசுருள் மின்னோட்டமானி, தொடு மின்னோட்ட மானி, வீழ் மின்னோட்டமானி.
143. கவரகம் அல்லது மின்னகம் என்றால் என்ன?
மின்னியக்கி அல்லது இயற்றியின் பகுதி. முதன்மை மின்னோட்டத்தைக் கொண்டு செல்வது.
144. இதன் அமைப்பு யாது?
இது சிறிய இயற்றியில் சுழலும் கம்பிச் சுருளாகவும் பெரிய இயற்றியில் நிலைக்கம்பிச் சுருளாகவும் இருக்கும்.
145. இதில் முறுக்கு விசையின் வேலை என்ன?
இது கவர் சுருளில் செயற்பட்டுப் பளுவிற்கு எதிராக வேலை நடைபெற உதவுவது.
146. தூரிகை என்றால் என்ன?
நகரும் பகுதியோடு உள்ள மின்தொடர்பு. மின்உந்தி அல்லது இயற்றியில் இருப்பது.
147. தூரிகை மின்னிறக்கம் என்றால் என்ன?
அதிக மின்னழுத்தமுள்ள கூரிய முனைகளுக்கருகில் தோன்றும் ஒளிர்வான வளிமின்னிறக்கம்.
148. திசைமாற்றி என்றால் என்ன?
மின்னோட்டத்திசையை மாற்றுங் கருவி.
149. மின்னியக்கி என்றால் என்ன?
மின்னோட்டத்தை உண்டாக்கும் கருவி உந்து வண்டியிலும் மிதிவண்டியிலும் இருப்பது. அளவில் சிறியது.
150. மின்னியற்றி என்றால் என்ன?
எந்திர ஆற்றலை மின்னாற்றலாக்கும் பெரிய எந்திரம். தொழிற்சாலைகளில் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 15 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், இயற்றியில், அல்லது, கருவி, மின்னோட்டமானி