மருத்துவம் :: உள்ளம்
101. அச்சம் என்றால் என்ன?
குறிப்பிட்ட பொருள்களைக் கண்டால் ஏற்படும் பய உணர்வு. வியர்த்தல் உண்டாகும். நரம்பு நோய் உள்ளவர்களிடமும் மூளை நோய் உள்ளவர்களிடமும் ஏற்படுவது.
102. இதன் வகைகள் யாவை?
நோயச்சம், சமூக அச்சம், இட அச்சம் திறந்தவெளி அச்சம், ஒளியச்சம் எனப் பலவகை. இவற்றை உளநோய்ப் பண்டுவத்தின் மூலம் போக்கலாம்.
103. விடாப்பிடி என்றால் என்ன?
தொடர்ந்து உண்டாகும் கருத்து அல்லது உணர்ச்சி. இதிலிருந்து நோயாளி தப்பிக்க முயல்வார்.
104. இல்பொருள் தோற்றம் என்றால் என்ன?
வரம்பு மீறிய சில நிலைகளில் நிகழும் புலன் தூண்டல்களிலிருந்து எழும் தோற்றம் அல்லது காட்சி. இதை நுகர்வோர் உண்மை எனக் கொண்டு நடப்பர். குடியர்கள் இதற்குட்படுபவர்கள்.
105. இல்பொருள் தோற்றி என்றால் என்ன?
மனமயக்கத்தை உண்டாக்கும் மருந்து.
106. திரிபுத்தோற்றம் என்றால் என்ன?
புலன் உணர்வுகளுக்குத் தவறான பொருள் ஏற்படுவதால் ஏற்படுங்கட்சி. பழுதைப் பாம்பென்று நினைத்தல்.
107. அகநோக்கு என்றால் என்ன?
ஒருவர் தம் எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றில் மட்டுமே ஆழ்ந்திருத்தல்.
108. அகநோக்கர் என்பவர் யார்?
அகநோக்கு இயல்புள்ளவர்.
109. புறநோக்கு என்றால் என்ன?
வெளியுலக நிகழ்ச்சிகளில் மிக்க அக்கறையும் பிறருடன் பழகுவதில் பெரு விருப்பமும் கொண்டவரிடம் காணப்படும் ஆளுமைப்பண்பு.
110. புறநோக்கர் என்பவர் யார்?
புறநோக்குள்ளவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உள்ளம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், அச்சம்