மருத்துவம் :: உள்ளம்

91. இதன் வகைகள் யாவை?
1. வீறுமிகு தாழ்ச்சி - உண்மை விலகாது இருத்தல்
2. உள் தாழ்ச்சி இதற்கு ஒரு முன்முடிவு இருக்கும்.
3. விருப்பமற்ற தாழ்ச்சி - விலக்கு நிற்கும் பொழுது ஏற்படுவது.
92. உளக்குறையாளர் என்பவர் யார்?
உள வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பவர்.
93. உளக்குறை என்றால் என்ன?
உள்ளம் போதிய அளவுக்கு வளராத நிலை.
94. உளப்பிளவு என்றால் என்ன?
இது பல உளக் கோளாறுகளைக் குறிப்பது. உள எழுச்சி குறையும், தீர்வு காணும் நிலையும் கூர்மை நிலையும் பழுதுபடும்.
95. உளக்கோளாறு என்றால் என்ன?
கடும் உளப் பிறழ்ச்சி.
96. எழுத்தை அறியாமை என்றால் என்ன?
மூளை நைவுப் புண்ணினால் எழுதிய அல்லது அச்சடித்த சொல்லைப் புரிந்து கொள்ள இயலாமை.
97. பின்வாங்கல் என்றால் என்ன?
தன்னைத்தானே சுருக்கிக் கொள்ளுதல். அச்சமுறும் நிலையில் சரி செய்து கொள்ளும் இயல்பான முறை.
98. பித்து என்றால் என்ன?
கடும் உளக்கோளாறு.
99. தடுத்தல் என்றால் என்ன?
தடை ஒரு செயல் நிறுத்தப்படுதல். எ-டு உளவியல் தடுத்தல்.
100. வெறி என்றால் என்ன?
தாழ்ச்சியுள்ள ஒர் உளக்கோளாறு. அளவுக்கு மீறிய மகிழ்ச்சி இருக்கும். முனைப்பான உளச்செயலும் வெளிப்படும். நோய்க் கூறுத் தூண்டலும் இருக்கும். தடுமாற்றமும் ஏமாற்றமும் இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உள்ளம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், இருக்கும், உளக்கோளாறு, தாழ்ச்சி