மருத்துவம் :: உள்ளம்
81. பாதுகாப்புணர்ச்சி என்றால் என்ன?
ஓர் இன்றியமையா உளத்தேவை. இது நீங்கின் தகைப்பாடு இல்லாமை தோன்றும். உளவியல் சிக்கல் ஏற்படும். குழந்தைக்கு இவ்வுணர்ச்சி கட்டாயம் தேவை.
82. உளச்சிக்கல் என்பது யாது?
இது ஓர் உளக்குறைபாடு, உளப்பகுப்பில் நனவிலித் தோற்றம் என்று குறிக்கப்படும் நனவாற்றலின் திசையையும் அமைப்பையும் இது உறுதி செய்வது.
83. இதன் வகைகள் யாவை?
தாழ்வுச் சிக்கல், உயர்வுச் சிக்கல், ஓடிபஸ் சிக்கல் எனப் பல வகை.
84. உளப்பண்டுவத்தின் முதன்மையான நோக்கம் யாது?
உளச்சிக்கலை நோயாளியின் நினைவிற்குக் கொண்டு வருவதே இதன் முதன்மையான நோக்கம்.
85. தாழ்வுச் சிக்கல் என்றால் என்ன?
தாழ்வு மனப்பான்மை. குழந்தையிடத்து ஏற்படும் தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணம். இது ஆட்லரின் தலையாய உளவியலின் மையக் கருத்து. தகுந்த வழியில் இது நீக்கப்படு வேண்டும்.
86. ஓடிபஸ் சிக்கல் என்றால் என்ன?
ஒரு சிறுவன் தன் தாயை இயல்பாக விரும்பித் தந்தை மீது பொறாமை கொள்ளுதல். கிரேக்கக் கட்டுக் கதைப்படி ஓடிபஸ் தன் தாயை மணந்து தந்தையைக் கொல்லுதல்.
87. பிராய்டு இதற்குக் கூறும் விளக்கம் என்ன?
குழவிப் பால் கொள்கையைக் கூறும் பொழுது, இதனைப் பிராய்டு விளக்கி, இது ஆண் குழவியிடம் இயல்பாக உள்ளது என்கிறார்.
88. எலக்ட்ரா சிக்கல் என்றால் என்ன?
மகளுக்குத் தந்தை மீதுள்ள அதிக அன்பு. அவள் தாயை வெறுப்பாள். கிரேக்கப் புனைவியலில் எலக்ட்ரா என்பவள் பெயரால் அமைந்தது.
89. ஒடுக்குதல் என்றால் என்ன?
கசப்பான எண்ணங்களை உள்ளத்திலிருந்து நீக்குதல்.
90. உளத்தாழ்ச்சி என்றால் என்ன?
ஏமாற்றம், இழப்பு, தோல்வி முதலியவற்றால் ஏற்படும் வருத்தம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உள்ளம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, சிக்கல், என்றால், தாயை, ஏற்படும், ஓடிபஸ்