மருத்துவம் :: உள்ளம்
![Mind](images/mind.jpg)
111. இருநிலை உளத்திறன் என்றால் என்ன?
விருப்பு, வெறுப்பு ஆகிய எதிர் உணர்ச்சிகளை ஒருவரிடத்து ஒரு பொருள் தோற்றுவிப்பது என்பது உளப் பகுப்பாரின் அடிப்படைக் கருத்து.
112. நெறிபிறழ்வு என்றால் என்ன?
குழந்தை மற்றும் காளைப்பருவத்தினர் செயலைக் குறிப்பது. சடங்குகளுக்குப் புறம்பான சமூக நலமற்ற செயல்களில் ஈடுபடுவதை இது குறிக்கும். "தீயதே நல்லது" என்னும் செயல்பாட்டினைக் கொண்டது.
113. கும்பல் என்றால் என்ன?
குழுவின் கடைசிநிலை. தூசி பெறுமானமில்லா நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு பெரிதுபடுத்தி இயங்கும் கூட்டம் இது. இதற்குச் சிந்திக்கும் திறன் குறைவு. உளஎழுச்சி அதிகம். எ-டு வன்முறைக் கும்பல்.
114. தசைக்கேடுகள் என்றால் என்ன?
ஒருவர் தம் சூழ்நிலையுடன் ஒன்றிச் செயற்படும் திறமை குறையும் பொழுது, அவரிடம் போராட்டங்கள் எழும். இவற்றிலிருந்து விடுபட அவரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவுகள். இவை, தீவிரமாயின் நெறிபிறழ்வு தோன்றும்.
115. பினே - சைமன் அளவுகோல் என்றால் என்ன?
குழந்தையின் நுண்ணறிவுத் திறனை அளக்கும் நுணுக்கம். பினே, சைமன் ஆகிய இருவரும் புகழ் பெற்ற பிரஞ்ச் உளவியலார். இவர்கள் அமைத்த அளவு கோல் இது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உள்ளம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்