மருத்துவம் :: உள்ளம்
11. உளநோய் மருத்துவம் என்றால் என்ன?
உளநோயை அறிந்து குணப்படுத்தலை ஆராயும் மருத்துவப் பிரிவு. இதைச் செய்பவர் உளநோய் மருத்துவர்.
12. ஜான் கேட் என்பவர் யார்?
ஆஸ்திரேலிய உளநோய் மருத்துவர். இலித்தியத்தின் குணப்படுத்தும் பண்புகளைக் கண்டறிந்தவர். (1995)
13. பிராய்டு கொள்கை என்றால் என்ன?
ஆஸ்திரிய உளவியலார் (1856-1936) சிக்மண்டு பிராய்டின் கொள்கை நரம்புக் கோளாறுகளையும் உளக்கோளாறுகளையும் விளக்குவது. இதற்கு மாற்று உளநோய்ப் பண்டுவம். இவர் உளப் பகுப்பின் தந்தை.
14. உளப்பகுப்பு என்றால் என்ன?
மனித நடத்தையின் போக்கை உறுதி செய்வதில் நனவிலி நோக்கங்களின் இன்றியமையாமையை வலியுறுத்தும் உளவியல் கொள்கை. உளக்கோளாறுகளைப் போக்கும் ஒர் உளமருத்துவ முறையுமாகும். இதை உருவாக்கியவர் சிக்மண்ட் பிராய்டு.
15. இன்னாட்டம் (ld) என்றால் என்ன?
உளப்பகுப்பு அறிஞர் பிராய்டு பயன்படுத்தும் சொல். மகிழ்ச்சியடைவதையே குறிக்ககோளாகக் கொண்ட உளப்போக்கினைக் குறிப்பது.
16. உளநோயியல் என்றால் என்ன?
உளக்கோளாறுகளின் நுட்பத்தை ஆராய்தல்.
17. உளமருத்துவச் சமூகப்பணியாளர் என்பவர் யார்?
ஓர் உளமருத்துவரின் கீழ் வேலை செய்பவர். உள நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க உதவுபவர்.
18. செயற்கொள்கை என்றால் என்ன?
நனவு நிலையினின்று எழும் விளைவுகளே உளவியல் ஆராய்ச்சிக்குரிய பொருள்கள் ஆகும் என்னும் கொள்கை.
19. ஆளுமை என்றால் என்ன?
ஒருவன் உளப்பான்மைகளும் இயல்புகளும் அடங்கிய தொகுப்பு. இதை உள்ள அமைப்பின் தொகு மொத்தம் எனலாம். இது ஆளுக்கு ஆள் வேறுபடுவது.
20. ஆளுமை வடிவுரு என்றால் என்ன?
பல ஆளுமைப் பண்புகளில் ஒருவரின் நிலைகளைத் தொகுத்துக் காட்டும் படம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உள்ளம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கொள்கை, பிராய்டு, உளநோய்