மருத்துவம் :: உள்ளம்
71. இதன் வகைகள் யாவை?
1. தற்கருத்தேற்றம்
2. எதிர்மறைக் கருத்தேற்றம்.
72. விருப்பாற்றல் என்றால் என்ன?
தன்னுடைய செயல்களையும் நடத்தையையும் மனிதன் தானே ஒழுங்குபடுத்தும் ஆற்றல். இலக்கை அடையவுள்ள இடர்களைப் போக்க உதவுவது. இவ்வாற்றல் இருந்தாலே எதையும் ஒருவர் செய்து முடிக்க இயலும். குழந்தைகளிடம் இது வளர்க்கப்பட வேண்டிய ஓர் ஆற்றல்.
73. குழந்தைப் பருவம் என்பது யாது?
ஏறத்தாழ 5 வயதிலிருந்து 12 வயது வரையுள்ள பருவம்.
74. குழந்தைகளை எத்தனை வகைகளாகப் பிர்க்கலாம்?
5 வகைகளாகப் பிரிக்கலாம்.
75. தனித்துள்ள குழந்தைகள் யாவை?
இவை பிறரது நட்பை விரும்புவதுமில்லை, பிறராலும் விரும்பப்படுவதில்லை.
76. ஒதுக்கப்பட்ட குழந்தைகள் யாவை?
இவற்றைப் பிற குழந்தைகள் வெறுக்கும். இவை அவற்றின் நட்பைப் பெற விரும்பும்.
77. காலுதற் விளையாட்டுக்க கொள்கை என்றால் என்ன?
குழந்தைகளின் உள்ளத்தில் முடங்கிக் கிடக்கும் உளவெழுச்சிகள் வெளிப்படக் காரணமாக இருப்பது விளையாட்டுக் கொள்கையே.
78. புறக்கணிப்புக் குழந்தைகள் யாவை?
பிற குழந்தைகள் இவற்றைப் புறக்கணிக்கும். இவை பிற குழந்தைகளை விரும்பும்.
79. பிற்பட்ட குழந்தை என்பது யாது?
பள்ளிப் பாடங்களில் அதிகம் பின்னேற்றமுள்ள குழந்தை.
80. மீத்திறக் குழந்தை என்றால் என்ன?
நுண்ணறிவு ஈவு 130 க்கு மேலுள்ள குழந்தை. இதற்குத் தனிப் பாடத் திட்டம் தேவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உள்ளம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - குழந்தைகள், யாவை, குழந்தை, என்ன, என்றால்