கணிதம் :: சார்பும் கணமும்
61. நேர்மாறல் உறுப்பு என்றால் என்ன?
ஒரு கணத்தின் உறுப்பு மற்றொரு உறுப்புடன் சேர்ந்து சமனி உறுப்பைக் கொடுக்கும்.
62. நேர்மாறல் சார்பு என்றால் என்ன?
ஒரு சார்பு A,B இல் உருமாற்றம் அடைவது முன்னரே வரையறை செய்யப்படும்பொழுது, கணம் A இல் கணம் B நேர்மாறல் உருமாற்றம் பெறும்.
63. நேர்மாறல் அதிபரவளை சார்புகள் என்றால் என்ன?
நேர்மாறல் முக்கோன அளவுச் சார்புகளுக்கு ஒத்த வகையில் அதிபரவளை சைன், கோசைன் முதலியவற்றில் நேர்மாறல் சார்புகள் வரையறை செய்யப்படுதல்.
64. நேர்மாறல் (தலைகீழ்) முக்கோண அளவுச் சார்புகள் என்றால் என்ன?
சைன், கோசைன், டேன்ஜண்ட் முதலியவற்றின் தலைகீழ்ச் சார்புகள்.
65. தனித்த என்றால் என்ன?
இடைநிலை அளவுகள் இல்லாத எண்கள் அல்லது நிகழ்ச்சிகளின் கனத்தைக் குறிப்பது. எ-டு. முழு எண்களின் கணம் தனித்தது.
66. இயங்குவரை (லோகஸ்) என்றால் என்ன?
கொடுக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவு செய்யும் புள்ளிகளின் கணம். அந்நிபந்தனையை நிறைவு செய்யும் எல்லாப் புள்ளிகளும் கணத்தின் உறுப்புகளாகும்.
67. புள்ளிகளின் இயங்குவரை என்றால் என்ன?
ஆயங்களுடன் தொடர்புடைய சமன்பாட்டால் வரையறை செய்யப்படும் புள்ளிகளின் கணம்.
68. புலம் என்பது என்ன?
1. சுழியைத் தவிர மற்றொரு எண்ணோடு கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் ஆகிய செயல்களுக்கு உட்படும் எண்களின் கணம். இதனால் ஒவ்வொரு உறுப்பும் ஒரே கனத்தைச் சார்ந்ததாக இருக்கும். எ-டு. வீதமுறு எண்களின் கணம் புலத்தைத் தோற்றுவிப்பது. பொதுவாகப் புலம் என்பது கூட்டல், பெருக்கல் ஆகிய இரு செயல்களைக் கொண்ட முழுமைக் கணமாகும்.
2. காந்தப்புலம், ஈர்ப்புப்புலம்: விசையுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சார்பும் கணமும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, கணம், என்றால், நேர்மாறல், சார்புகள், புள்ளிகளின், வரையறை, எண்களின்