கணிதம் :: சார்பும் கணமும்

21. தொகையாக்கி என்றால் என்ன?
தொகையாக்கப்படுவதற்குரிய சார்பு. எ-டு. f(x).dx, f(x) என்பதின் தொகையாக்கி.
22. தொகையாக்கல் என்றால் என்ன?
x என்னும் மாறியின் இடைவெளிமேல் f(x) என்னும் சார்பில் மாற்றத்தைத் தொடர்ந்து கூட்டுதல். நுண் கணிதத்தில் வகைக்கெழு காணலின் தலைகீழான முறை.
23. கணம் (செட்) என்றால் என்ன?
ஒரு கணத்தில் பல உறுப்புகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் வேறுபட்டவையாகவும் தனித்தன்மை உடையதாகவும் இருந்தால், அக்கணம் நன்கு வரையறுக்கப்பட்ட பொருள்களின் தொகுப்பே ஆகும்.
24. கண அமைப்பு வடிவம் என்பது யாது?
இங்கு ஒரு குறிப்பிட்ட கணத்தை அதன் உறுப்புகள் நிறைவு செய்யும் பண்புகளைக் கூறி வரையறுக்கலாம்.
1. கணம் A என்பது இரட்டை எண்களின் கணம்.
2. x என்பது கணம் A இன் ஓர் உறுப்பு. இதன் A= B{x:x} ஓர் இரட்டை எண். M (விசிறி, பேனா, பென்சில்)
3. M={x:x}, ஒரு விசிறி அல்லது ஒரு பேனா அல்லது ஒரு பென்சில்.
25. கணத்தின் வகைகள் யாவை?
1. வெற்றுக் கணம். 2. ஒருறுப்புக் கணம். 3. முடிவுறு கணம். 4. முடிவுறாக் கணம். 5. சமான கணம். - 6. உட்கணம். 7. அடுக்குக் கணம். 8. அனைத்துக் கணம். 9. நிரப்புக் கனம்.
26. கணக்கொள்கையும் தருக்கமும் எவ்வாறு ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையவை?
கணம் என்பது பல இனங்களின் தொகுப்பு. இவை எண்களாகவோ கருத்துகளாகவோ பொருள்களாகவோ இருக்கலாம். மிக அடிப்படையான கணக்குக் கருத்துகளை ஆராயக் கன ஆராய்ச்சி பயன்படும்.
மெய்யறிவியலின் ஒரு பிரிவு தருக்கம். சரியான பகுத்தறிதலின் விதிகளைப் பற்றி இது ஆராய்வது. இது தொடர்பாகக் குறியீட்டுத் தருக்கத்தைக் கணக்கறிஞர்கள் உருவாக்கியுள்ளனர். இத்தருக்கம் என்பது முறையான பகுத்தறிமுறையாகும். கணக்குக் குறியீடுகளையும் முறைகளையும் பயன்படுத்துவது. கணக்கியலில் பல குறியீட்டுத் தருக்க முறைகளை உருவாக்கியுள்ளனர். இவை கணிப்பொறி வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுபவை. தொகுத்தறிதல், பகுத்தறிதல் முதலியவை கணிதத்தில் பயன்படுபவையே.
27. கணத்தைக் குறித்தல் என்றால் என்ன?
கணம் என்பதைக் குறியீட்டில் எழுத, அக்கணத்தின் உறுப்புகளை இரு தலை அடைப்பிற்குள் எழுத வேண்டும். இவ்வாறு எழுதும் முறைக்குப் பட்டியல் அமைப்பு முறை என்று பெயர். இம்முறையில் எழுதும்பொழுது பலமுறை வரும் உறுப்புகளை ஒரே ஒரு முறைதான் எழுதவேண்டும்.
எ-டு. ΜΑΤΗΕΜΑΤΙCS
M = [M, A, T, E, I, C, S]
28. மாதிரி எடுத்தல் என்றால் என்ன?
முழுத் தொகையிலிருந்து பெயரளவு உட்கணத்தைத் தேர்ந்தெடுத்தல். இம்மாதிரியைப் பகுக்க, முழுத்தொகை பற்றிய செய்தியளிக்கும். இது புள்ளிஇயல் உய்மானம் எனப்படும்.
29. மாதிரி எடுப்புப் பரவல் என்றால் என்ன?
மாதிரிப் புள்ளிவிவரத்தைப் பரவுமாறு செய்தல். எ-டு. n அளவுள்ள வேறுபட்ட மாதிரிகள் ஒரே அளவு தொகையிலிருந்து எடுக்கப்படும் பொழுது, ஒவ்வொரு மாதிரியின் வழிவகைகள் மாதிரி எடுப்புப் பரவலைத் தோற்றுவிக்கும்.
30. இரு கணங்களின் சேர்ப்பு என்றால் என்ன?
A மற்றும் B என்பவை இரு கணங்கள் என்றால், AUB (A சேர்ப்பு B) என்பது A யிலுள்ள அல்லது B யிலுள்ள அல்லது AB இரண்டிலுள்ள உறுப்புகளைக் குறிக்கும். இவ்வாறு AUB = {x: xεA} அல்லது xεB அல்லது xεA மற்றும் B}
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சார்பும் கணமும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கணம், என்றால், என்ன, அல்லது, என்பது, மாதிரி