கணிதம் :: சார்பும் கணமும்

41. மூடிய கணம் என்றால் என்ன?
கனத்தை வரையறை செய்யும் வரம்புகள் சேர்க்கப்பட்ட கணம். ஒரு வட்டத்தின் உள்ளும் மேலும் உள்ள புள்ளித் தொகுதி மூடிய கணங்களுக்கு எடுத்துக்காட்டு.
42. திறந்த கணம் என்றால் என்ன?
எல்லைகளில் வரையறுக்கப்பட்ட கணம். எல்லைகள் கணத்தில் சேராதவை. 0 க்கு மேலுள்ள எல்லா வீதமுறு எண்களும் 10 க்குக் கீழுள்ள எண்களும் அடங்கிய கணம்.
43. வரிசைக்கணம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட வரிசையிலுள்ள நிரைகளின் கணம்.
44. மெய்யெண் கணம் என்றால் என்ன?
குறி R. வீதமுறு எண்கள் வீதமுறா எண்கள் ஆகியவற்றின் சேர்ப்புக் கணம்.
45. கூடுகை (combination) என்றால் என்ன?
கொடுக்கப்பட்ட பொருள்களின் கணத்தின் உட்கணம். எ-டு. ஒரு வகுப்பில் 15 மாணவர்களும் 5 புத்தகங்கள் மட்டும் இருப்பதாகக் கொள்க. இப்பொழுது ஒவ்வொரு புத்தகத்தையும் 3 மாணவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். இது நிகழும் வழிகளின் எண்ணிக்கை 15 லிருந்து 3 கூடுகைகள், 15! 3! 2! அல்லது 455
46. வெற்றுக்கணம் என்றால் என்ன?
உறுப்புகள் இல்லாத கணம். 0 க்குக் கீழுள்ள இயல் எண்களின் கனம்.
{m: mεN; m < 0} = θ
47. அடுக்குக் கணம் என்றால் என்ன?
ஒரு கனத்தின் எல்லா உட்கணங்களையும் உறுப்புக ளாகக் கொண்ட கணம். இதன் ஒவ்வொரு உறுப்பும் ஒரு கணமே.
48. தகுஉட்கணம் என்றால் என்ன?
В = {1,2,3,... 10}
A= {2,4,6,8,10}. குறியீடு A⊂B
49. பகா எண்களின் கணம் என்றால் என்ன?
{2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 ...} ஒர் எண்ணின் பகாக் காரணிகள் அதனுள் துல்லியமாக வகுபடும் பகா எண்களே. எ-டு. 45 இன் பகா எண் காரணிகள் 3, 3, 5 (45 =3x3+5).
ஒவ்வொரு முழு எண்ணும் பகா எண் காரணிகளைக் கொண்ட தனித்த கணத்தைக் கொண்டது.
50. சேர்ப்புக் கணம் என்றால் என்ன?
குறி ∪. இரண்டிற்கு மேற்பட்ட கணங்களின் எல்லா உறுப்புகளும் சேர்ந்த கணம்.
A= {2,4,6}, B = {3,6,9} என்றால் பின் A∪B= {2,3,4,6,9}
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சார்பும் கணமும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கணம், என்றால், என்ன, ஒவ்வொரு, எல்லா