கணிதம் :: சார்பும் கணமும்
1. சார்பு என்றால் என்ன?
புள்ளியியல் மாதிரியின் பண்பு. முழு மக்கள் தொகையினையும் குறிக்க இயலாதவாறு மாதிரியைச் செய்வது. காட்டாக, ஒரு மருத்துவமனையில் நோயாளிகளை அளவை செய்து, அதன் அடிப்படையில் மருத்துவத் தகவல்கள் திரட்டப்பட்டால், அம்மாதிரி பொதுமக்கள் தொகையின் சார்புடைய மதிப்பீடு ஆகும். ஏனெனில், உடல் நலமுள்ள மக்கள் இதில் விலக்கப் படுகிறார்கள்.
2. சார்பின் பல வகைகள் யாவை?
1. மெய்ச்சார்பு, 2. தனிச் சார்பு, 3. இருநிலைச் சார்பு, 4. இயைபுச் சார்பு, 5. நிலைச் சார்பு, 6. சமச்சார்பு, 7. முற்றொருமைச் சார்பு, 8. செலுத்தும் சார்பு, 9. மீப்பெருதொகைச் சார்பு, 10. நேர்மாறு சார்பு, 11. எதிர்மாறல் சார்பு, 12. பல்லுறுப்புச் சார்பு, 13. வீதமுறு சார்பு, 14. தொடர்சார்பு, 15. உள்நோக்கிய சார்பு, 16. வட்டச் சார்பு ,17. மேல்நோக்கிய சார்பு, 18. தொடர்பற்ற சார்பு.
3. பெசல் சார்புகள் யாவை?
J என்னும் எழுத்தால் குறிக்கப்படும் சார்புக்கணம். இவை உருளை வடிவ கோண ஆயத் தொலைகளில் இலாப்லாஸ் சமன்பாட்டிற்குத் தீர்வுகளாக அமைபவை. தீர்வுகள் முடிவிலா வரிசையாக அட்டவணையில் காட்டப்பட்டிருக்கும்.
4. வகையீடு காணல் (differentiation) என்றால் என்ன?
ஒன்றுக்குச் சார்பாக ஒர் அளவு மாறுவீதத்தைக் கானும் முறை. எ-டு. உந்து வண்டிப் பயணம்.
5. வகையீடு என்றால் என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளின் சார்பில் ஏற்படும் மிக நுண்ணிய மாற்றத்தால் உண்டாவது. இது முழு வகைக்கெழு, பகுதி வகைக்கெழு என இரு வகை.
6. மதிப்பகம் (டொமைன்) என்றால் என்ன?
சார்பு அமையும் அளவுகள் அல்லது எண்களின் கணம்.
7. எல்லை என்றால் என்ன?
பொதுவாகச் சாரா மாறி ஏதோ ஒரு மதிப்பை அடையும் பொழுது, ஒரு சார்பு அமையும் மதிப்பு பகுப்பு என்பது கணிதத்தின் ஒரு பிரிவு. இதன் அடிப்படை எல்லை என்னும் கருத்து. ஒரு தனிமாறியாக அது அமையும் பொழுது, ஒரு சார்பின் எல்லை மதிப்பாகும். எ-டு. n முடிவிலியை அணுகும் பொழுது, n உறுப்புகளின் கூட்டுத்தொகையின் எல்லை குவி வரிசை எல்லையாகும்.
8. காமா சார்பு என்பது என்ன?
இது தொகைச் சார்பு.
9. இரட்டைத் தொகையீடு என்றால் என்ன?
ஒரே சார்பை இரண்டு தடவைகள் தொகையாக்குவதால் கிடைக்கும் முடிவு.
10. ஒற்றைச் சார்பு என்றால் என்ன?
x என்னும் மாறியின் f(x) என்னும் சார்பு.
இதற்கு f(-x)= -f(x), எ-டு. : x இன் ஒற்றைச் சார்புகள் sin x, x3.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சார்பும் கணமும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சார்பு, என்ன, என்றால், எல்லை, என்னும், பொழுது, அமையும்