கணிதம் :: சார்பும் கணமும்

31. இரட்டை என்றால் என்ன?
இரண்டால் வகுக்கப்படுவது. இரட்டை எண்களின் கணம் {2,4,6,8...}
32. உறுப்பு என்றால் என்ன?
ஒரு கணத்தின் ஒரு தனி இனம்.
1. தைமாதம் ஒரு கணத்தின் உறுப்பு.
2. 5 என்பது 2, 10 ஆகிய எண்களுக்கிடையே உள்ள முழுக்கள் கணத்தின் உறுப்பு.
3. கணக்குறியீட்டில் இது 5E என்று எழுதப்படும். (2,3,4,5,6,7,8,9,10)
4. கூம்பு அல்லது உருளையின் வளைபரப்பைத் தோற்றுவிக்கும் கோட்டுத்துண்டு.
5. கோடு, பரப்பு அல்லது கனஅளவின் சிறிய பகுதி. தொகையாக்கலால் தொகுக்கப்படுவது.
33. உறவுகள் என்றால் என்ன?
இரு கணங்களுக்கிடையே உள்ள தொடர்புகள். இவை வரிசை இன்னகளின் கணமாக எழுதப்படும். ஓர் உறவானது வரிசை இணைகளின் கணமாகிறது. எ-டு. (இராசேந்திரன், இராசராசன்) (ஆதித்திய கரிகாலன், சுந்தரசோழன்).
34. எண்ணுகணம் என்றால் என்ன?
உறுப்புகள் எண்ணப்படக்கூடிய கணம். எ-டு. பகாஎண்கள் எண்ணப்படலாம்.
35. ஓருறுப்புக் கணம் என்றால் என்ன?
ஓர் உறுப்பை மட்டும் கொண்டது. எ-டு. S= (14).
36. அனைத்துக்கணம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்டவாதத்திற்காக நாம் எடுத்துக் கொள்ளும் கணங்கள் அனைத்தும். ஒரு குறிப்பிட்ட கணம் A இன் உட்கணமாக இருந்தால், கணம் A நாம் எடுத்துக் கொண்டவாதத்திற்கான அனைத்துக்கணம் ஆகும். குறி u.u = x:x, 100 ஐ விடக் குறைந்த ஓர் இயல் எண். R-u உட்கணம்.
37. உட்கணம் என்றால் என்ன?
கணம் A லுள்ள ஒவ்வோர் உறுப்பும் கணம் B இன் உறுப்புகளாக இருந்தால், கணம் Aஐ கணம் Bஇன் உட்கணம் எனலாம். கணம் A ஆனது கணம் B யுனுள் அடங்கியுள்ளது.
B - ஒரு பள்ளியிலுள்ள மாணவர்கள்
A - ஒன்பதாம் வகுப்பிலுள்ள மாணவர்கள்.
38. இதன் வகைகள் யாவை?
1. தகு உட்கணம். 2. தகாஉட்கணம்.
39. முடிவுறு கணம் என்றால் என்ன?
இதில் உறுப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அவற்றை எண்ணிக் கணக்கிட இயலும். அல்லது உறுப்புகளின் எண்ணிக்கை முடிவுறுவது. ஓராண்டில் 12 மாதங்கள் இருத்தல்.
எ-டு. : N = {1,2,3,4,5,6,7,8,9}
40.முடிவுறாக் கணம் என்றால் என்ன?
உறுப்புகளின் எண்ணிக்கை முடிவுறாமலுள்ள கணம். நேர்முழுக்கள் கணம் z={1,2,3,4...} முடிவுறாதது. 20 க்குக் கீழுள்ள நேர்முழுக்களின் கணம் முடிவுறுகணம். ஒரு குறிப்பிட்ட தளத்திலுள்ள வட்ட எண்ணிக்கை முடிவுறா கணமே.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சார்பும் கணமும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கணம், என்றால், என்ன, எண்ணிக்கை, உட்கணம், உறுப்புகளின், கணத்தின், உறுப்பு, அல்லது