கணிதம் :: சார்பும் கணமும்

51. வென்படம் என்றால் என்ன?
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கில கணக்கு மேதை வென் பெயரால் அமைந்தது. கணங்களுக்கிடையே உள்ள உறவுகளைக் காட்டப் பயன்படுவது.
52. வென்படத்தில் கணங்கள் எவ்வாறு குறிக்கப்படுகின்றன?
பொதுவாக, அனைத்துக் கணத்தைச் செவ்வக வடிவிலும், அதன் உட்கணங்களை வட்டத்திலும் அல்லது ஏதேனும் ஒரு மூடிய வளைவரையினாலும் வென்படத்தில் குறிக்கலாம். இதன்மூலம் தீர்வுகளும் காணலாம்.
53. கணத்தின் பயன்கள் யாவை?
1. தற்காலக் கணக்கில் எளிய முறையில் தீர்வு காணப் பயன்படுதல்.
2. எண்கணிதம் எண்களின் கனத்துடன் தொடர்புள்ளது.
3. இயற்கணிதம், மாறிகளைக் கணத்துடன் தொடர்பு படுத்துவது.
54. முற்றொருமைக் கணம் என்றால் என்ன?
ஒரு கணம் மற்றொரு கணத்தைப் போல் ஒரே உறுப்புகளைக் கொண்டிருத்தல், எ-டு. 2 ஐவிடப் பெரிதான இயல் எண்களும் 2 ஐ விடப் பெரிதான முழுக்களின் கணமும் முற்றொருமைக் கணங்களாகும்.
55. முற்றொருமை உறுப்பு என்றால் என்ன?
ஒரு கணத்தின் உறுப்பு. மற்றொரு உறுப்புடன் சேர்ந்து அதை மாறாமலிருக்குமாறு செய்யும்.
56. முற்றொருமை விதி யாது?
ஏதோ ஒன்று உண்மையாக இருக்குமானால், அது உண்மையே. P→P
57. முற்றொருமை (Identity) என்றால் என்ன?
பன்மக் குறியீடுகளின் எல்லா மதிப்புகளுக்கும் மெய்யாக இருக்கும் சமன்பாடு. எ-டு. (x±)x±b), (a±b)2, (a+b), (a-b). இதைக் கொண்டு காரணிப்படுத்தலாம். பொதுவாக, முற்றொருமைகளில் a இன் அடுக்குள்ள இறங்குவரிசையிலும் b இன் அடுக்குள்ள ஏறுவரிசையிலும் எழுதுவது வழக்கம்.
58. நிரப்பி (complement) என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட கணத்தில் இல்லாத எல்லா உறுப்புகளையும் கொண்ட கணம்.
A={1,2,3} என்னும் கணமும், அனைத்துக் கணம் E உம் எல்லா இயல் எண்களையும் கொண்டுள்ளதாக ஏற்றால், பின் A இன் நிரப்பு கணம் A என்று எழுதப்படும். இது {4, 5, 6,..} ஆகும்.
59. நிரப்புதல் என்றால் என்ன?
கணங்களின் ஒர் இன்றியமையா உறுப்புச் செயல்.
60. நேர்மாறல் என்றால் என்ன?
ஒரணி மற்றொரு அணியோடு சேர்ந்து கொடுக்கும் பெருக்கற்பலன், சமனி அணி I.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சார்பும் கணமும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், கணம், எல்லா, முற்றொருமை, மற்றொரு