புவியியல் :: எரிமலை
1. வரலாற்றில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட எரிமலை வெடிப்பு எது?
கி.பி. 74இல் வெசூயஸ் எரிமலை வெடிப்பு பதிவு செய்யப்பட்டது.
2. இதுவரை எவ்வளவு எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன?
சுமார் 2500 வெடிப்புகள்.
3. இவற்றில் பசிபிக் வளையத்தைச் சுற்றி ஏற்பட்ட வெடிப்புகள் எத்தனை? ஏன்?
இவ்வளையத்தில் 336 விழிப்புள்ள எரிமலைகள் உள்ளன. ஆகவே 2000 வெடிப்புகள் இங்கு ஏற்பட்டுள்ளன.
4. எரிமலைகள் குறித்துத் திரட்டப்பட்ட தகவல்களால் நாம் அறிவது யாது?
1500 - 1914 வரை திரட்டப்பட்ட தகவல்களிலிருந்து 1,90,000 பேர் எரிமலை வெடிப்புகளால் இறந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
5. வெசூயஸ்சின் நிலை என்ன?
அது பல தடவைகள் வெடித்துள்ளது.
6. எரிமலை மெளனாலோவின் சிறப்பென்ன?
எல்லா எரிமலைகளைவிட இது அதிக எரிமலைக் குழம்பை ஒட விட்டுள்ளது.
7. ஜப்பானில் எரிமலைகள் நிலை என்ன?
ஜப்பானில் எரிமலைகள் நிரம்ப உள்ளன.
8. விழிப்புள்ள எரிமலைகள் உலகில் எங்குள்ளன?
62% பசிபிக் பெருங்கடல் விளிம்பிலும், 32% உலகின் மற்றப் பகுதிகளிலும் உள்ளன.
9. விழிப்புள்ள எரிமலைகள் உள்ள நாடுகள் எவை?
1. ஜப்பான் - 50
2. குரில் தீவுகள் - 39
3. மைய அமெரிக்கா- 31
4. சிலி - 26
10. எரிமலையின் அமைப்பை விளக்குக.
மேற்பரப்பில் பார்க்க, எரிமலை என்பது ஒரு குன்றே. கூம்பு வடிவத்தில் உள்ளது. இதன் குழாய் போன்ற பகுதியே திறப்பு ஆகும். இதன் வழியே வெளித் தள்ளப்பட்ட பொருள் செல்கிறது. வெளித்தள்ளப்பட்ட பொருள் ஒரு கூம்பை உண்டாக்கும். இதன் உச்சி தட்ட வடிவில் இருக்கும். இதுவே எரிமலை வாய்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரிமலை - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எரிமலை, எரிமலைகள், வெடிப்புகள், இதன், விழிப்புள்ள