புவியியல் :: எரிமலை
51. இதன் வேலை என்ன?
ஒரு குறிப்பிட்ட எல்லையில் புவி உள்பரப்பின் மின்னமைப்பை ஆராய்வது.
52. இந்நுணுக்கம் பயன்படும் வேறு துறைகள் யாவை?
எண்ணெய் ஆய்வு, புவி வெப்பத்துருவிகள், கற்கோள ஆய்வுகள், கனிவள ஆய்வு, நிலத்தடி நீர் ஆய்வு, பொறி இயல் புவி அமைப்பியல்.
53. இத்திட்டப் பணி எவ்வாறு செயற்படுகிறது?
இதில் 600 நிலையங்கள் காந்த வழி துருவி அளவெடுப்புகளில் ஈடுபட்டுள்ளன.10,000 நிலையங்கள் ஈர்ப்பு ஆய்வுகளை மேற்க்கொண்டுள்ளன. நிலநடுக்க ஆய்வுகள் 800 கி. மீ. தொலைவுக்குத் திட்டமிடப் பட்டுள்ளது. இதில் 50 மின் அளவெடுப்புகளும் அடங்கும். (1993)
54. ஓர் வலிய எரிமலையின் எழுச்சியாற்றல் எத்தகையது?
நீர் வளிக் குண்டின் ஆற்றலை விட 300 மடங்கு ஆற்றல் அதிகம் கொண்டது.
55. பியு-ஜியாமா என்பது யாது?
ஜப்பானின் ஒயா ஒழியா எரிமலை, புனிதமாகக் கருதப்படுவது.
56. சில குறிப்பிடத்தக்க எரிமலைகள் யாவை?
1. சாந்தோரினி - கிரீக் தீவு
2. மவுண்ட எட்னி - சிசிலி
3. அக்யூங் எரிமலை - பாலி, இந்தோனேஷியா.
4. இரசு - காஸ்டோரிகா.
5. காமகட்கா எரிமலை - காம்சட்கா
6. மிசாரா எரிமலை - ஜப்பான்
7. டால் எரிமலை - மணிலா
8. மவுண்ட் எலினா - அமெரிக்கா.
57. எரிமலைத் தொடர்பாக நிம்பஸ்-2 வேலை என்ன?
இது அமெரிக்க வானிலை நிலா. இது சர்ட்சே வெடித்த பின், அதன் வெப்பத்தைப் பதிவு செய்தது. மேற்பரப்பில் அளந்ததில் 4% பதிவு செய்யப்பட்டது.
58. எரிமலைக் குழம்பு என்றால் என்ன?
எரிமலையிலிருந்து வெளிவரும் பாறைக் குழம்பு. இது காடித்தன்மையோ காரத்தன்மையோ பெற்றிருக்கும்.
59. பாறைக்குழம்பு (magma) என்றால் என்ன?
உருகிய சிலிகேட் பொருள். குறிப்பிட்ட ஆழத்தில் புவி ஒட்டிற்குக் கீழ் இருப்பது. நீர்மமாக இருக்கும். எல்லா பாறைகளின் தாய்ப் பொருள் இது.
60. எரிமலையின் நன்மைகள் யாவை?
1. இதன் குழம்பு படிந்து ஆறும்பொழுது அப்பகுதி செழிப்புள்ளதாகிறது. இதிலுள்ள கணிப்பொருள்களே இதற்குக் காரணம்.
2. எரிமலை ஆராய்ச்சி புவியின் உள்ளமைப்பை ஆராயவும் எரிமலை முன்னறிய்வு செய்யவும் பயன்படுவது.
3. எரிமலை நீர்கள் மூட்டழற்சி வலியைப் போக்குபவை.
4. சுற்றுலா இடமாக இருந்தால் அந்நியச் செலாவணி.
5. ஒய்ந்தொழிந்த எரிமலைகள் கனிவளம் கொண்டவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரிமலை - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எரிமலை, என்ன, புவி, குழம்பு, யாவை, ஆய்வு