புவியியல் :: எரிமலை
71. எரிமலை பற்றிய சில உண்மைகள் யாவை?
1. புவியில் ஆழமாக ஒடும் நீர் சில வகை எரிமலைகளின் இருப்பிடத்தை விளக்கவல்லவை.
2. உலக எரிமலைகளில் பல அமைப்புத் தட்டுகளின் எல்லைகளுக்கிடையே உள்ளன.
3. கடல் மேல் ஒட்டுத்துண்டுகள் ஒன்றின் மீது மற்றொன்று படியும்பொழுது, எரிமலைத் தெறிப்புகள் உண்டாகின்றன. காட்டாக, ஜப்பான் எரிமலைகள். ஆசியத் தட்டுக்கு அடியில் பசிபிக் தட்டுகளும், பிலிப்பைன் தட்டுகளும் நழுவியபொழுது இந்த எரிமலைகள் உருவாயின.
4. பெரிய எரிமலைகள் தரைக்கு அடியிலுள்ள ஆழமான பாறைகளின் நுண்கால்வாய்களின் திறப்பிலிருந்து உண்டாகி இருக்கலாம்.
72. எக்கோள்களில் எரிமலைகள் உள்ளன?
திங்கள், வெள்ளி முதலியவற்றில் எரிமலைகள் உள்ளன.
73. எரிமலைச் சுழற்சி என்றால் என்ன?
ஒர் எரிமலை தோன்றுதல், வளர்தல், ஒடுங்குதல் ஆகியவை எரிமலைச் சுழற்சியில் உள்ளவை. இது பால காலகட்டங்களுக்கு உட்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரிமலை - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எரிமலைகள்