புவியியல் :: எரிமலை
21. உலகிலுள்ள விழிப்பு எரிமலைகள் எத்தனை?
கிட்டத்தட்ட 1300 எரிமலைகள்.
22. ஓராண்டுக்கு ஒரு முறை வெடிக்கும் எரிமலைகள் எத்தனை?
20 - 30 வரை.
23. பெரும்பாலான எரிமலைகள் எங்கமைந்துள்ளன?
தட்டுகளின் முனைகளுக்கு அருகிலுள்ள இடங்களில் உள்ளன. இத்தட்டுகள் புவி வெளிப்புற அடுக்குகளை உண்டாக்குபவை.
24. விழிப்புள்ள எரிமலைகள் உலக அளவில் எவ்வாறு பரவியுள்ளன?
1. 45% கிழக்குப் பசிபிக் தீவு வளைவுகள்
2. 17% வட, தென் அமெரிக்கா
3.14% இந்தோனேஷியத் தீவு வளைவு
4. 13% அட்லாண்டிக் தீவுகள்
5.7% மையத் தரைப்பகுதி
6. 3% மையப் பசிபிக்
7.1% இந்தியப் பெருங்கடல் தீவு
25. விழிப்புள்ள எரிமலைகள் பரவியுள்ள இரு வளையங்கள் யாவை?
1. இந்தோனேஷிய வளையம் (93 எரிமலைகள்)
2. பசிபிக் வளையம் (307 எரிமலைகள்)
26. எங்கு விழிப்புள்ள எரிமலைகள் அதிகமுள்ளன?
தீவுகளில் அதிகமுள்ளன. காட்டாகக் குரிலி தீவில் 39 எரிமலைகள் உள்ளன.
27. வரலாற்றில் விழிப்புள்ள எரிமலைகள் என்று சொல்லக் கூடியவை எத்தனை?
800 எரிமலைகள்.
28. எரிமலைகள் அதிகமுள்ள அட்லாண்டிக் தீவுகள் யாவை?
ஜேன் மேயன், ஐஸ்லாந்து, பொவாப், டிரிங்டன் டா குன்கா, அசோரஸ், கேனலி கேப்வெர்டி
29. இவற்றில் மிகப் பழமையானது எது?
கேப்வெர்டி தீவு, 120 மில்லியன் ஆண்டுகள்.
30. எரிமலை இயக்கத்தோடு தொடர்புள்ள தனிமம் எது?
கந்தகம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரிமலை - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எரிமலைகள், தீவு, விழிப்புள்ள, எத்தனை, பசிபிக்