புவியியல் :: எரிமலை
31. எரிமலையின் இயல்புகள் யாவை?
1. எரிமலை வரும் வழி வட்டவடிவப் பள்ளமாகவோ, நீண்ட வெடிப்பாகவோ இருக்கும்.
2. எரிமலை வெடிப்புக்குப்பின் எரிமலைக்கக்கல் நடைபெறும்.
3. எரிமலைக்குழம்பு படியும் இடம் செழிப்பாக இருக்கும்.
32. எரிமலை இயல் என்றால் என்ன?
எரிமலைகளை ஆராயுந்துறை.
33. மவுண்ட் ஒயாமா என்பது யாது?
இது ஜப்பான் எரிமலை. டோக்கியோவிற்குத் தெற்கே உள்ளது.
34. இது எப்பொழுது வெடித்தது? எவ்வளவு தொலைவு?
2000 ஆகஸ்டில் வெடித்தது. 180 மீட்டர் உயரம். இந்த உயரத்திற்கு மேல் எரிமலைச் சாம்பல் வெடித்தது.
35. இதன் முப்பருமப் படத்தை எடுத்த வானவெளிக் கலம் எது? எப்பொழுது?
அமெரிக்க வானவெளி ஓடம் தன் பயண நாட்களான ஆகஸ்ட் 10, ஜூன் 17 ஆகிய நாட்களில் படம் எடுத்தது. இதற்கு முன்னேறிய ரேடார் பயன்படுத்தப்பட்டது.
36. இதற்கு எந்த நுணுக்கம் பயன்படுத்தப்பட்டது?
ஓட ரேடார் தளவரைவியல் பயண துணுக்கம் பயன்படுத்தப்பட்டது (Shuttle Radar Topography mission).
37. வண்ணத்தகவல் எவ்வாறு பெறப்பட்டது?
இது 2000 ஜூலையில் பெறப்பட்டது. இதற்கு வெப்ப உமிழ்வும், எதிரொலிப்பும் கதிர்வீச்சுமானியும் பயன் படுத்தப்பட்டன.
38. இப்படப்பிடிப்பின் பயன் யாது?
மவுண்ட் ஒயாமாவின் தளவரைவை இப்படம் காட்டிற்று. இது செங்குத்தாகக் காட்டப்பட்டது. வடகிழக்கிலிருந்து தீவு நோக்கப்பட்டது. எரிமலைச் சாம்பல் இயல்பையும் அறிய முடிந்தது. இத்தகவல் எரிமலைக்குழம்பு ஒட்டத்திசையை முன்னறிந்து கூற உதவும்.
39. எரிமலை மிகு அழுத்தம் எவ்வாறு அளக்கப்படுகிறது?
முறை 1. இதில் எரிமலையின் பரப்பிலுள்ள உருத்திரிபுகள் ஒரு நீட்சி மாதிரியோடு சேர்க்கப்படும். இதனால் வெடிப்பு இயக்கமும் உப்பலும் ஒரே சமயத்தில் ஏற்படுகின்றன என்பது தெரிகிறது.
முறை 2. இதில் வெடிப்புத் துளைகளில் காற்றழுத்தம் அளக்கப்படுகிறது. பின் அது ஒடும் மாதிரியோடு இணைக்கப்படுகிறது. பாறைக் குழம்புத் தேக்கத்திலுள்ள அழுத்தத்தை மதிப்பிட இது செய்யப்படுகிறது.
40. எரிமலை வகைகளின் சிறப்பென்ன?
புவிக்குக்கீழ் நடைபெறுவது என்ன என்பதை அவை நமக்குத் தெரிவிப்பவை. இவ்வளியில் ஏற்படும் வேறுபாட்டைக் கொண்டு எரிமலை இயக்கத்தின் குறிப்பிடத் தகுந்த இயல்பை அறியலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரிமலை - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எரிமலை, பயன்படுத்தப்பட்டது, வெடித்தது, இதற்கு