புவியியல் :: எரிமலை
11. எரிமலை எவ்வாறு தோன்றுகிறது?
அது எப்பொழுதும் எப்படியும் ஏற்படலாம். மெக்சிகோ கிராமவாசி ஒருவர் எரிமலை தோன்றியதைத் தம் கண்ணால் நேராகப்பார்த்துள்ளார்.1943 பிப்ரவரி மாதம் அவர் தம் வயலுக்குச் சென்றிருந்தார். அங்குத் திடீரென்று ஓர் உறுமல் ஒலியைக் கேட்டார். உடன் வெப்பப் பாறைகள் தரைக்கு மேல் உருண்டோடி வந்தன. ஒரு புதிய மலை உருவாயிற்று. தணல் சாம்பல், குழம்பு ஆகியவை உமிழப்பட்டன. சில மாதங்களுக்குப்பின் அது 1000 அடி உயரம் வளர்ந்தது. அடியில் அகலம் 3000 அடி.
12. எரிமலை தோன்றக் காரணங்கள் யாவை?
1. நிலையாக மாறும் கதிரியக்கப் பொருள்கள் உண்டாக்கும் வெப்பம் பாறைகளை உருகச் செய்கிறது.
2. உருகிய பாறைகளுக்கு அடியிலுள்ள வளிகள், நீராவி ஆகியவற்றின் அளவுகள் உண்டாக்கும் அதிக அழுத்தம்.
3. நில நடுக்கங்களுக்கு எரிமலை அலைக்கழிவுகளோடு உள்ள தொடர்பு. நிலநடுக்கங்கள் உள்ள இடத்தில் எரிமலைகளும் இருத்தல் குறிப்பிடத்தக்கது.
13. எரிமலையின் அறிகுறிகள் யாவை?
உள்ளுர் நிலநடுக்கங்கள், நிலத்தடி இரைச்சல்கள், நீர் ஊற்றுகளின் ஓட்டத்திலும், வெப்ப நிலையிலும் மாற்றங்கள், எரிமலையைச் சுற்றிலும் பல வகை வளிகள் தோன்றுதல் ஆகியவை காணப்படும்.
14. எரிமலையின் உடனிகழிச்சிகள் யாவை?
தணல், சாம்பல், நீராவி, தூசி, குழம்பு, ஒட்டம், சேறு ஒட்டம், பெரும் கடல் அலைகள் தோன்றுதல், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவை.
15. எரிமலையின் கால அளவு எவ்வாறு உள்ளது?
சில நாட்களிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகள் வரை. தற்பொழுதுள்ள எரிமலைகள் பழங்காலத்தில் தோன்றியவை.
16. எரிமலை எப்பொழுது தோன்றியது?
புவி வரலாற்றில் நன்கு அறியப்பட்ட ஊழி தொல் ஊழி. இந்த ஊழிக் காலத்தில்தான் எரிமலை இயக்கம் தொடங்கியது. இன்று வரை தொடர்கிறது.
17. எரிமலைகளுக்கும் நிலநடுக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமை யாது?
இரண்டின் தோற்றமும் ஒன்றே. தட்டியக்கத்தால் தோன்றுபவை.
18. எரிமலைகளும் நிலநடுக்கங்களும் எவ்விரு நிலைகளில் வேறுபடுகின்றன?
அளவெண், வெடிப்பு ஆகிய இரண்டிலும் வேறுபடுபவை.
19. எரிமலை என்றால் என்ன?
புவிக்கடியில் உருகிய நிலையிலுள்ள பாறைக்குழம்பு, தப்பிப் புவியின் மேற்பரப்புக்கு வருவதால் ஏற்படுவது எரிமலை.
20. எரிமலையின் வகைகள் யாவை?
1. விழிப்புள்ள எரிமலை - இது அடிக்கடி எரிமலைக் குழம்பைக் கக்கும்.
2. உறங்கும் எரிமலை ஏதோ ஒரு சமயம் குழம்பைக் கக்கும்.
3. அற்றுப்போன எரிமலை அறவே குழம்பைக் கக்காதது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரிமலை - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எரிமலை, எரிமலையின், யாவை, குழம்பைக், ஆகியவை, உள்ள