புவியியல் :: ஐம்பெரும் கடல்கள்
1. அட்லாண்டிக் கடலை முதன்முதலில் கடந்தவர் யார்? முடிவு என்ன?
கொலம்பஸ் முதன்முதலில் அட்லாண்டிக் கடலைக் கடந்தார். இதற்குரிய பயணத்தை 1492இல் மேற் கொண்டார். இப்பயணம் அமெரிக்காவைக் கண்டு பிடிக்க வழிவகை செய்தது. தவிர, அட்லாண்டிக்கைக் கடப்பதற்கும் அதில் வாணிபம் தொடங்குவதற்கும் வழிவகை செய்தது.
2. கொலம்பஸ் கப்பல் பயண நாட்கள் எவ்வளவு அடைந்த இடம் எது?
70 நாட்கள். கெளனாகனி.
3. அட்லாண்டிக் பெருங்கடலின் முக்கிய நீரோட்டங்கள் யாவை?
நடுக்கோட்டு நீரோட்டம், கல்ப் நீரோட்டம், ஆப்பிரிக்க நீரோட்டம், பிரேசில் நீரோட்டம், தென்இணைப்பு நீரோட்டம்.
4. அட்லாண்டிக் போர் எத்தனை ஆண்டுகள் நடந்தது?
1939-1945 வரை நடந்தது. இரண்டாம் உலகப் போரின் தொடர்பாக நடந்தது.
5. இப்போரில் தாக்கிய நாடு எது?
ஜெர்மனி. அதற்குத் துணையாக இத்தாலி நின்றது.
6. இப்போரில் எதிர்த்த நாடு எது?
பிரிட்டன். பிரிட்டனுக்கு அமெரிக்கா உதவியது.
7. இப்போரில் வென்ற நாடு எது? தோற்ற நாடு எது?
வென்ற நாடு பிரிட்டன். தோற்ற நாடு ஜெர்மனி.
8. நேடோ என்னும் வடஅட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எப்பொழுது தொடங்கப்பட்டது?
1949 ஏப்ரல் 4இல் தொடங்கப்பட்டது.
9. இதன் நோக்கம் என்ன?
ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்றொரு நாடு அதற்கு உதவுவது.
10. கடல் வழிகளில் மிகப் பெரியது எது?
வடஅட்லாண்டிக் வழி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐம்பெரும் கடல்கள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நாடு, நீரோட்டம், அட்லாண்டிக், நடந்தது, இப்போரில்