புவியியல் :: ஐம்பெரும் கடல்கள்
61. ஆர்க்டிக் பெருங்கடலின் முக்கிய நீரோட்டங்கள் யாவை?
ஆர்க்டிக் நீரோட்டம், கல்ப் நீரோட்டம், லாப்ரடார் நீரோட்டம்.
62. இந்தியப் பெருங்கடலை முதன்முதலில் ஆராய்ந்தவர் யார்?
1885 - 1887இல் எச்.எம்.ஐ இன்வெஸ்டிகேட்டர் எனும் கப்பலில் அலாக் என்பார் இந்தியக் கடற்பகுதிகளைச் சுற்றிச் சென்றார்.
63. இந்தியக் கடலை உலக அளவில் ஆராயும் திட்டம் எப்பொழுது உருவாயிற்று?
1959இல் உருவாயிற்று.
64. இந்தியப் பெருங்கடலின் முக்கிய நீரோட்டங்கள் யாவை?
நடுக்கோட்டு நீரோட்டம் மொசம்பிகுய நீரோட்டம், அகுலாஸ் நீரோட்டம், பாரசீக நீரோட்டம்.
65. இந்தியப் பெருங்கடல் வழியாக முதல் பயணம் எப்பொழுது தொடங்கிற்று?
1874 - 1875இல் சேலன்ஜர் என்னும் கப்பலில் தொடங்கிற்று.
66. இந்தியப் பெருங்கடலை உலக அளவில் ஆராயுந் திட்டம் எப்பொழுது தொடங்கிற்று?
1959இல் தொடங்கிற்று.
67. இந்தியப் பெருங்கடலை ஆராயக் காரணங்கள் யாவை?
1. இறந்தொழிந்த பண்டைக்கால உயிர்களின் எச்ச மிச்சங்களை இதில் தேடிக் கண்டுபிடிக்கலாம். இது உயிரின் படிமுறை வளர்ச்சிக்கு உதவும்.
2. உலகக் கடல்களிலேயே மீன் வளம் அதிகமுள்ளது இக்கடலே.
3. இக்கடல் கணிப் பொருள் களஞ்சியம்.
4. இக்கடலில் காற்றோட்டங்களும் நீரோட்டங்களும் முழு அளவுக்குத் திசை மாறுகின்றன.
68. சோவியத்துக் கப்பல் ஆராய்ச்சி இந்தியப் பெருங்கடல் பற்றிப் புலப்படுத்தும் உண்மைகள் யாவை?
சோவித்து நாட்டின் விட்யஸ் என்னும் கப்பல் 1959இல் இந்தியப் பெருங்கடலை ஆராய்ந்தது. அதன் முடிவுகளாவன: -
1. இந்தியக் கடலின் தரை மிக அரிய அமைப்புள்ளது. கிழக்கு மேற்குப் பகுதிகளில் அதன் அமைப்பு பெருமளவுக்கு மாறுபடுகிறது.
2. தரை 8-15 மீட்டர் நீளத்திற்கிடையே உள்ள நான்கு உட்பகுதிகளைக் கொண்டது.
3. உட்பகுதிகளில் மீள்மாற்றங்கள் காணப்படுகின்றன.
4. நிலநடுக்க உற்றுநோக்கல்கள்: இந்தியக் கடலில் உள்ள தளர்ச்சியான படிவுகளின் தடிமன்100-200 மீட்டர்.
69. இந்தியப் பெருங்கடலின் கனிவளம் எவ்வாறு உள்ளது?
1. பொட்டாசியம், மக்னிசியம், மாங்கனீஸ், நிக்கல், கொபால்ட், செம்பு முதலியவை உள்ளன.
2. எண்ணெய்ப் படிவுகள் அதன் கரையோரங்களில் காணப்படுகின்றன.
70. இந்தியக்கடல் ஆராய்ச்சியினால் ஏற்பட்டுள்ள கண்டுபிடிப்புகள் யாவை?
1. பரந்த பள்ளத்தாக்கு ஒன்று இக்கடலில் உள்ளது. இதன் நீளம் 6000 மைல். அகலம் 25 மைல்.
2. பல பெரிய கால்வாய்களும் உள்ளன.
3. இதில் குடைவுகள், பெரிய மலைத் தொடர்கள், தாழ்வாக அமைந்துள்ள சமவெளிகள் உள்ளன.
4. இக்கடலில் கதிரியக்க வீச்சின் அளவு அதிகம்.
5. அரபிக் கடலில் குறைந்த அளவு உயிர்வளி உள்ளது.
6. செங்கடலில் 780 மீ ஆழத்தில் இரு வெப்பத் துளைகள் உள்ளன.
7.1974ஆம் ஆண்டு பிப்ரவரியில் பம்பாய்க் கடற்கரைக்கு அப்பாலுள்ள கடலின் அடியில் எண்ணெய் எடுக்கப்பட்டது. இப்பகுதிக்குப் பாம்பே ஹை என்று பெயர். 1976 மே மாதத்திலிருந்து எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
8. இந்தியப் பெருங்கடலில் மிகச் செங்குத்தான கண்டச் சரிவு உள்ளது. இது உலகிலேயே மிக ஆழமானது.
9. இந்தியக் கடல் ஆராய்ச்சியினால் இந்தியப் பெருங்கடல் 2,80,00,000 சதுரமைல்களில் அறிவியல் திட்பத்துடன் ஆராயப்பட்டுள்ளது. ஒரு பகுதியாக அக்கடலின் வேதி உயிரியலைப் பற்றி ஒரு நாட்டுப் படச் சுவடி தயாரிக்கப்பட்டுள்ளது.இது கடலிலிருந்து அதிக உணவு பெறப் பெரிதும் உதவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐம்பெரும் கடல்கள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இந்தியப், நீரோட்டம், இந்தியக், யாவை, தொடங்கிற்று, உள்ளது, பெருங்கடலை, இக்கடலில், 1959இல், பெருங்கடலின், எப்பொழுது, பெருங்கடல்