புவியியல் :: ஐம்பெரும் கடல்கள்
51. உலகின் எவ்வளவு பகுதி பனிக்கட்டியால் மூடியுள்ளது?
புவிநிலப்பரப்பின் 1/10 பகுதிக்கு மேல் பனிக்கட்டி முடியுள்ளது.கிரீன்லாந்து பனிக்கட்டி 1,800,000 சதுரகிமீ அளவுக்குள்ளது. அண்டார்க்டிகாவில் பனிக்கட்டி 13,000,000 சதுர மீட்டர் அளவுக்குள்ளது.
52. எவ்வளவு நீர் உலகில் பனிக்கட்டியில் உள்ளது?
உலகின் நன்னீரில் 3/4 பகுதி பனிக்கட்டியில் உள்ளது.
53. ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கும் ஆறுகள் யாவை?
ஒப், எனிசி, லேனா. இவை மைய ஆசிய மலைத் தொடரில் உருவாகி வடக்கு நோக்கிப் பாய்கின்றன.
54. இந்தியப் பொருங்கடலில் கலக்கும் ஆறுகள் யாவை?
ஆசியா கண்டத்தில் டைக்ரிஸ், யூப்ரடிஸ், சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி, சால்வீன், சிட்டகாங் முதலிய ஆறுகள் இக்கடலில் கலக்கின்ன.
55. பசிபிக் பெருங்கடலில் கலக்கும் ஆறுகள் யாவை?
ஆமுர், கோவாங்ஹோ, யாங்கட்சிகியாங்.
56. ஆர்க்டிக்கின் சுற்றுலாப் பகுதிகள் யாவை?
ட்ராம் சோ, ஸ்பிட்ஸ்பர்கன், கிருமா.
57. ஆர்க்டிக்கின் கனிவளம் எத்தகையது?
உறைந்த ஆர்க்டிக் பகுதியில் 200 ஆண்டுகள் வரை கிடைக்கக் கூடிய நிலக்கரி உள்ளது. பெட்ரோலியமும் அதிக அளவுக்குத் தேங்கியுள்ளது. இங்குச் செம்பு, அலுமினியம், காரீயம், துத்தநாகம், டங்ஸ்டன், யுரேனியம், தங்கம் ஆகியவை பனிக்கட்டிக்குக் ககிழ்ப்
புதைந்துள்ளன.
58. வடமுனை ஒளி என்றால் என்ன?
புவியின் வடகோளத்தில் தோன்றும் பல வண்ணங்கள் உள்ள ஒளி. வானவெளிக்கலத்திலிருந்து பார்க்க, இது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். முனை ஒளிகளில் ஒரு வகை.
59. ஆர்க்டிக் பகுதிக்கு முதன்முதலில் சென்றவர் யார்?
பெத்தியாஸ் என்னும் கிரேக்க ஆராய்ச்சியாளர். இவர் கி.மு. 325இல் தம் பயணத்தை மேற்கொண்டு முதன் முதலில் உலகைச் சுற்றியவர்.
60. ஆர்க்டிக்கை ஆராய்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யார்?
புரோபிஷர், ஜான் டேவிஸ், பேரண்ட்ஸ், குக், பேரி, கேன்டகேனி, கிரீலி, பியரி, வில்கிட்ஸ்கி, ராஸ்டுசன், பயர்டு, வில்கின்ஸ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐம்பெரும் கடல்கள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆறுகள், யாவை, கலக்கும், ஆர்க்டிக், உள்ளது, பனிக்கட்டி