புவியியல் :: ஐம்பெரும் கடல்கள்
11. அட்லாண்டிக் பெருங்கடலின் துணைக்கடல்கள் யாவை?
வடகடல், பால்டிக் கடல், மையத்தரைக்கடல், கருங் கடல், மர்மோரா கடல், கரிபீயன் கடல்.
12. அட்லாண்டிக் பெருங்கடலின் உள்நாட்டுக் கடல்கள் யாவை?
ஹட்சன் விரிகுடா, மெக்சிகோ வளைகுடா.
13. தந்தி முறையைக் கண்டறிந்தவர் யார்?
மோர்ஸ்
14. இவர் தெரிவித்த கருத்து யாது?
அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகத் தந்திச் செய்தி அனுப்பலாம்.
15. முதல் அட்லாண்டிக் தந்தி எப்பொழுது போடப்பட்டது?
1858இல் போடப்பட்டது.
16. இரட்டைமுறைத் தந்தி எப்பொழுது செயற்படத் தொடங்கிற்று?
1871இல்
17. கடல்தந்தியின் பயன்கள் யாவை?
உலகில நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை மணிக் கணக்கில் நிமிடக்கணக்கில் செய்தித்தாள் தெரிவிக்க இத்தந்தியே காரணம். வாணிபம் உலக அளவில் இதனால் தான் நடைபெறுகிறது.
18. இன்று உலகிலுள்ள கடல் தந்திகள் எத்தனை?
500க்கு மேல் உள்ளன.
19. அட்லாண்டிக் கடலின் கனிவளம் எத்தகையது?
இதன் செங்களிமண்ணில் 220 டிரில்லியன் அலுமினியமும் 600 டிரில்லியன் டன் இரும்பும், 73 டிரில்லியன் டன் டிட்டானியமும் 15 டிரில்லியன் டன் வெனாடியமும் உள்ளன.
20. அட்லாண்டிக் சாசனம் என்றால் என்ன?
இரண்டாம் உலகப் போரின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது உருவாகியது. இது அமைதி நாடி விட்ட கூட்டு அறிக்கை.1941இல் பிரிட்டன் பிரதமர் சர்ச்சிலும் அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்ட்டும் சேர்ந்து விட்ட அறிக்கை. அனைத்து நாடுகள் நலங்கருதி விடப்பட்ட அறிக்கை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐம்பெரும் கடல்கள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அட்லாண்டிக், கடல், டிரில்லியன், அறிக்கை, தந்தி, யாவை