புவியியல் :: ஐம்பெரும் கடல்கள்
41. அண்டார்க்டிக்கில் நெடும்பயணத்தை மேற்கொண்டுள்ள வீராங்கனைகள் யார்?
லிவ் அர்னிசன், அன்பங்க்ராப்ட்
42. தென்முனை ஒளி என்றால் என்ன?
புவியின் தென்கோணத்தில் பலவண்ணங்களுடன் தோன்றுவது. கண்ணைப் பறிக்கும் காட் . வானவெளிக் கப்பலிலிருந்து பார்க்கலாம். முனைஒளிகளில் ஒருவகை.
43. வடமுனை, தென்முனை என்பவை யாவை?
புவியின் வடக்கேயும் தெற்கேயும் உள்ள பகுதிகள்.
44. முனைப்பகுதிப் பனிக்கட்டிக் கீழ் என்ன உள்ளது?
அண்டார்க்டிகாவில் பனிக்கட்டிக்குக் கீழ் ஒரு பெரிய கண்டம் உள்ளது. இதில் உயர்ந்த மலைகளும் ஆழமான பள்ளத்தாக்குகளும் உள்ளன. வடமுனையைச் சுற்றியுள்ள பனிக்கட்டி நிலத்திலில்லாமல் கடலில் மிதந்து கொண்டுள்ளது.
45. அண்டார்க்டிக்கில் எப்பொழுதும் பனி பெய்து கொண்டுள்ளதா?
இல்லை. உண்மையில் மையப்பகுதியில் குறைந்த பனியே பெய்கிறது. கண்டத்திலுள்ள காற்று மிகக் குளிர்ந்தும் மிக உலர்ந்தும் இருக்கும். ஒராண்டுக்கு 50 மிமீ பனியே பெய்கிறது. கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் அவ்வளவு குளிர் இராது. காற்றில் ஈரம் அதிகமிருக்கும். அதிகப் பணி பெய்யும்.
46. அண்டார்க்டிக் வாழ்வதற்குரியதா?
இல்லை. நிலையாக யாரும் குடியேறி வாழவில்லை. ஆராய்ச்சி நிலையங்கள் பல உள்ளன. இங்கு அறிவியலார் பல மாதங்கள் தங்கி ஆராய்ச்சி செய்கின்றனர். கடற்கரைக்கு அப்பால் அண்டார்க்டிக்காவில் உயிர்கள் வாழவில்லை. சில உண்ணிகள், மாசிகள், பூக்கும் தாவர வகைகள் இரண்டு ஆகியவை உள்ளன.
47. முனைப்பகுதிகள் என்பவை யாவை?
புவியின் வடக்கேயும் தெற்கேயும் உள்ள பகுதிகள். இவை ஆர்டிக் பகுதியும், அண்டார்க்டிக் பகுதியும் ஆகும்.
48. ஆர்க்டிக் பகுதி எங்குள்ளது?
ஆர்க்டிக் வட்டத்தினுள் அமைந்துள்ளது. இந்தக் கற்பனைக்கோடு வடமுனையைச் சுற்றியமைந்துள்ளது.
49. அண்டார்க்டிக் பகுதி எங்குள்ளது?
இது தென்முனையைச் சுற்றியுள்ள கண்டமாகும்.
50. வடமுனைக்குக் கீழ்ச் சென்ற கப்பல் எது?
1958இல் அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் நாட்டிலஸ் வடமுனைக்குக் கீழ்ப் பயணம் செய்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐம்பெரும் கடல்கள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அண்டார்க்டிக், புவியின்