புவியியல் :: ஐம்பெரும் கடல்கள்
21. அட்லாண்டிக் நகரத்தின் சிறப்பென்ன?
அமெரிக்காவில் நியூஜெர்சேயில் உள்ளது. கடலுக்கு அருகிலுள்ள சிறந்த தங்குமிடம்.
22. அண்டார்க்டிக் கண்டத்தை ஆராய்ந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் யார்?
கேப்டன்குக், ராஸ், நேர்ஸ், கிறிஸ்டன்சன், ஷேக்கில்டன், அமுண்ட்சன், ஸ்காட், பயர்டு ஆகியோர்.
23. அண்டார்க்டிக் வரலாற்றிலேயே எப்பொழுது சிறப்பாக ஆராயப்பட்டது?
1957 - 1958இல் நடைபெற்ற நில இயற்பியல் ஆண்டுத் திட்டத்தின் போது நன்கு ஆராயப்பட்டது.
24. அண்டார்க்டிக் பெருங்கடலின் முக்கிய நீரோட்டங்கள் யாவை?
அண்டார்க்டிக் நகர்வு நீரோட்டம், மேற்கு நீரோட்டம் பெருவியன் நீரோட்டம்.
25. மைத்ரி என்பது யாது?
அண்டார்க்டிக்கில் இந்தியாவிற்குரிய நிலையான ஆராய்ச்சி நிலையமாகும்.
26. அண்டார்க்டிக் பெருங்கடலில் ஏற்படும் ஒலிகளுக்குக் காரணமென்ன?
இக்கடலில் ஒலிகள் உருவாகின்றன. அவை சீழ்க்கை ஒலியாகவும் இரைச்சல் ஒலியாகவும் பீப் ஒலியாகவும் உள்ளன. இவற்றிற்குக் காரணம் வெடல் கடலில் வாழும் சீல்களே. தங்களுக்குள் செய்தி தெரிவிக்கவே அவை இந்த ஒலிகளை எழுப்புகின்றன என்று திமிங்கில - கீல் ஒலி ஆராய்ச்சி வல்லுநர் டாக்டர் வில்லியம் ஷிவில் கூறுகின்றார்.
27. அண்டார்க்டிக்கின் முதல் நாட்டுப்படச் சுவடியை உருவாக்கிய நாடு எது?
சோவியத்து உருசியா.
28. விண்கதிர்கள் என்பவை யாவை?
விண்வெளியில் தோன்றும் கதிர்கள்.
29. இக்கதிர்கள் பற்றி அண்டார்க்டிக் ஆராய்ச்சியின் முடிவென்ன?
விண்கதிர்களின் வழிகளில் மாற்றங்கள் காணப்படுகின்றன. விண்கதிர்களின் நிலநடுக்கோடு 45 அளவுக்கு மேற்காகச் சாய்ந்துள்ளது.
30. அண்டார்க்டிக் கடல் ஆராய்ச்சியால் உருவாகியுள்ள கொள்கை யாது?
450 ஆண்டுகளுக்கு முன் (16ஆம் நூற்றாண்டில்) தென்முனை, வெப்பச் சகாராவின் கண்டநகர்வு விளைவினால் ஏற்பட்டது என்னும் ஒரு கொள்கை நிலவுகிறது. மேலும் நிலநடுக்கோட்டிற்குத் தெற்கேயுள்ள கண்டங்களில் மிகப்பெரிய கண்டமான டாண்ட் வானிலாந்தின் பகுதியாக ஒரு காலத்தில் இருந்தன என்னும் கொள்கைக்கு அண்மைக்காலக் கண்டுபிடிப்பு கள் அரவணைப்பாக உள்ளன. அண்டார்க்டிக் கடல், அதன் தரைகள், தரையின் காந்தப்புலம் ஆகியவற்றை ஆராய்ந்ததன் விளைவாக ஒரு புதுக்கொள்கை உருவாகியுள்ளது. கடல்தரை பரவுகிறது என்பதே அக்கொள்கை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐம்பெரும் கடல்கள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அண்டார்க்டிக், ஒலியாகவும், நீரோட்டம்