புவியியல் :: நிலநடுக்கம்
1. நிலநடுக்கம் என்றால் என்ன?
புவியின் உள்ளே தோன்றும் விசைகளால் பெருமளவில் பாறைகள் நகர்வதால் கீறல்களும் பிளவுகளும் உண்டாகின்றன. இவ்வாறு தோன்றும் பிளவுகளின் இரு புறமுமுள்ள பாறைகள் சட்டென்று கீழோ மேலோ செல்வதால் ஏற்படுவது நில நடுக்கம். சில சமயங்களில் எரிமலைகள் வெடிப்பதாலும் நில நடுக்கம் உண்டாகும்.
2. நிலநடுக்கவியல் ஒர் அறிவியலாக எப்பொழுது உருப்பெற்றது?
1750 களில்.
3. நிலநடுக்கவியல் உருவாகக் காரணமாக இருந்த இரு பெருமக்கள் யாவர்?
பிரஞ்சு நாட்டு அலெக்சிஸ் பெர்னி, ஆங்கில நாட்டு இராபர்ட் மேலட். இவர்கள் இருவரும் 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்கள்.
4. மின் காந்த நில நடுக்க வரைவியை அமைத்தவர் யார்?
1875 இல் இத்தாலியைச் சார்ந்த பால்மியா அமைத்தார்.
5. வரலாற்றுப் பதிவுப்படி தமிழ்நாட்டில் முதன் முதலில் நிலநடுக்கம் எங்குப் பதிவாகியுள்ளது?
29-1-1822 இல் விழுப்புரத்தில் பதிவாகியுள்ளது. அளவெண் 5. அட்சக்கோடு 12.06. தீர்க்கக் கோடு 79.00.
6. தமிழ்நாட்டில் இரு தடவைகள் எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது?
தர்மபுரியில். 25-8-1998. அளவெண் 3.5. அட்சக்கோடு 12.40. தீர்க்கக் கோடு. 78.10.
4-1-2001 அளவெண் 3.0. அட்சக்கோடு 09.70. தீர்க்கக் கோடு 76.80.
7. கோவையில் நில நடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது?
8-2-1900 அளவெண் 6.
8. திருத்தப்பட்ட வகைப்பாட்டின்படி நிலநடுக்கம் உண்டாகும் தென்னாட்டுப் பகுதிகள் யாவை?
தமிழ்நாடு: திருவண்ணாமலை, வேலூர்.
ஆந்திரம்: நெல்லூர், விசாகப்பட்டிணம்.
9. கோய்னா நிலநடுக்கத்திற்குக் கூறப்பட்ட காரணங்கள் யாவை?
1. கோய்னா அணைக்கட்டிலுள்ள நீரழுத்தம்.
2. தரைகீழ் அணுகுண்டு வெடிப்புகள் (நியுமெக்சிகோ).
3. செயற்கை ஏரி உருவாக்கியது.
10. கோய்னா நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட குழியின் பருமன்கள் என்ன?
குறுக்களவு 60 அடி ஆழம் 350 அடி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலநடுக்கம் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நிலநடுக்கம், அளவெண், கோய்னா, கோடு, அட்சக்கோடு, நடுக்கம், தீர்க்கக்