புவியியல் :: நிலநடுக்கம்
41. இதன் அளவு சேதமில்லாததையும் சேதத்தையும் எவ்வாறு குறிக்கிறது?
அளவெண் 5க்குக் கீழுள்ளது (2-5) அளவெண் 5க்குக் கீழுள்ளது (2-5) சேதமில்லை. அளவெண் 5-9 வரை யுள்ளது கடும் சேதத்தை உண்டாக்கும்.
42. இதற்கு மாற்றாகவும் பரவலாகவும் பயன்படும் அளவு கோல் எது?
மெர்காலி அளவுகோல். இதுவே தற்பொழுது அறிவியலார் பயன்படுத்துவது.
43. நிலநடுக்கங்களின் நிகழ்வு எவ்வாறு உள்ளது?
1. உலகில் ஒராண்டில் ஒரு மில்லியன் நிலநடுக்கங்கள் - ஏற்படுகின்றன.
2. இவற்றில் 100-200 மட்டுமே பேரழிவை உண்டாக்குபவை.
3. 40,000 நிநடுக்கங்களை நாம் ஆண்டுதோறும் உணர்கிறோம். ஒரு நிமிக்கு இரண்டு.
4. பிளவுக் கோடுகளில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
44. நிலநடுக்கங்களின் இயல்புகள் யாவை?
1. இவை ஏற்படுவதில் ஒர் ஒழுங்குள்ளது: அதிகாலை அல்லது இரவு.
2. அலைகளை உண்டாக்குபவை.
3. உயிருக்கும் உடைமைக்கும் சேதம் விளைவிப்பவை.
4. பிளவுக்கோடுகள் நலிவாக உள்ள இடத்தில் தோன்றுபவை.
5. எரிமலையோடு தொடர்புள்ளவை.
45. நிலநடுக்கங்களின் செறிவென்ன?
1. ஒவ்வோராண்டும் 20,000-30,000 மக்கள் நிலநடுக் கங்களுக்கு இரையாகின்றனர்.
2. 7-8 அளவெண்ணுள்ள நிலநடுக்கங்களே உயிருக்கும் உடைமைக்கும் சேதம் விளைவிப்பவை.
3. அளவெண் 5க்குக் கீழ் உள்ளவை தீங்கற்றவை.
46. நிலநடுக்க அலைகளின் வகைகள் யாவை?
1. முதன்மை அலைகள் (P): நீள் அலைவகை. ஒலி அலையில் உள்ளது போன்று துகள்கள் அதிர்வுறும் இது இழுப்பு அல்லது தள்ளு விளைவை உண்டாக்கும். இதன் விரைவு 7.8 கிமீ/வினாடி. இவை நிலநடுக்க வரைவு நிலையத்தை அடைபவை.
2. இரண்டாம் நிலை அலைகள் (S): குறுக்கலைகள். இவற்றில் பரவலுக்கு எதிராகச் செங்கோணத்தில் துகள்கள் அதிர்வுறும். இவை கெட்டிப் பொருள்கள் வழியாகவே செல்லும். இவற்றின் நேர்விரைவு 435 கிமீ/வினாடி.
3. நீள்அலைகள்: கடல் ஆலைகள் போல் புவிப்பரப்பு நெடுகச் செல்பவை. இவற்றிற்குச் சுழல் இயக்கம் உண்டு. அதிகச் சேதம் உண்டாக்குபவை.
47. இம்மூன்று வகை அலைகளையும் அறிமுறையில் முன்னறிந்தவர் யார்?
1829இல் பாய்சன் முன்னறிந்தார்.
48. இவற்றை வேறுபடுத்தி அறிந்தவர் யார்?
1897இல் ஆர்.டி. ஒல்டுகாம்.
49. நிலநடுக்கங்களின் விளைவுகள் யாவை?
1. இவற்றின் அழிக்கும் ஆற்றல் 10,000 அணுக்குண்டு வெடிப்புகளுக்குச் சமம்.
2. மேற்பரப்பு ஏறி இறங்கும். கடலின் பரப்பு போல் உருளும். இதனால் உண்டாகும் அலைகள் 2அடி ஆழம் இருக்கும். பாம்பு போன்று திருகல் ஏற்படும். அசைவு முன்னும் பின்னும் இருக்கும்.
3. உடன் மலைகள் 25 அடி உயரத்திற்குக் காற்றில் தோன்றும்.
4. பெரும் வெடிப்புகள் தரையில் ஏற்படும் இவை 150 மைல் தொலைவுக்குப் பரவும். இவை தோன்றும் விரைவும் மூடும் விரைவும் ஒன்றே.
5. அதிர்ச்சி அலைகள் புவியின் மையம் வரியாகச் செல்லும். இந்த அலைகள் புவிமைய அமைப்பை நன்கு தெரிவிப்பவை.
50. புவியின் ஒடு எத்தனை தட்டுகளாகப் பிரிந்துள்ளது?
1. யூரேசியத்தட்டு.
2. ஆஸ்திரேலியத்தட்டு.
3. பிலிப்பைன் தட்டு.
4. ஜீவான் டி பியுகோ தட்டு.
5. வடஅமெரிக்கத் தட்டு.
6. கோகோஸ் தட்டு.
7. பசிபிக் தட்டு.
8. கரிபீயத்தட்டு.
9. நாஸ்காதட்டு.
10 அண்டார்க்டிக் தட்டு.
11. தென்அமெரிக்கத் தட்டு.
12. ஸ்கோஷியா தட்டு.
13. அரேபியத்தட்டு.
14. ஆப்பிரிக்கத்தட்டு.
15. இந்தியத்தட்டு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலநடுக்கம் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - தட்டு, அலைகள், அளவெண், நிலநடுக்கங்களின், சேதம், அல்லது, 5க்குக், உண்டாக்குபவை, யாவை