புவியியல் :: நிலநடுக்கம்
11. இந்தியாவில் ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் யாவை?
1. கோய்னா நிலநடுக்கம் 1967, டிசம்பர் இறந்தவர் 170 பேர். அளவெண் 7.
2. குஜராத் நிலநடுக்கம், 2001 ஜனவரி இறந்தவர் 20,000 பேர் அளவெண் 6.9, 7.9.
தக்காண பீடபூமி நில நடுக்கவியல் முறையில் நிலைப்புள்ளது என்று கருதப்படுவது. இங்கு ஏற்பட்ட முதல் பெரும் நில நடுக்கம் கோய்னா நில நடுக்கம் ஆகும்.
12. கோய்னா நிலநடுக்கத்தில் தப்பியவை எவை?
1. கோய்னா அணைக்கட்டு ( ரூ 40 கோடி)
2. கோய்னா மின்னாற்றல் நிலையம்.
13. மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது?
மகாராஷ்டிரத்தில் லாதூர் என்னுமிடத்தில் 30-9-1993 அன்று ஏற்பட்டது. இறந்தவர் 10,000 பேர் அளவெண் 6.3.
14. ஈரான் நிலநடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது?
21-6-1990, இறந்தவர் 35,000. அளவெண் 7.7
15. நிலநடுக்கம் இல்லாத பகுதி எது?
ஐஸ்லாந்து.
16. அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய நாடுகள் யாவை? ஏன்?
இத்தாலி, ஜப்பான், சீனா, ஈரான், துருக்கி, இந்தியா. இவை முதிர்ந்த மலைப்பகுதியில் உள்ளன.
17. ஜப்பானில் கொடுமையான நிலநடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது?
டோக்கியோவில் 1923 இல் இறந்தவர் 1,50,000.
18. சீனாவில் கொடுமையான நிலநடுக்கம் எப்பொழுது ஏற்பட்டது?
1976 டாங்ஷனில் ஏற்பட்டது. இறந்தவர்கள் 7,50,000.
19. நிலநடுக்கவியல் படத்தில் இந்தியா எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?
5 மண்டலங்கள்.
மண்டலம் 1. இடரில்லை. கர்நாடகம்.
மண்டலம் II. குறைந்த இடர். தமிழ் நாடு, போபால், இந்திய மையப்பகுதி.
மண்டலம் III. சீரான இடர். சென்னை, லக்னவ், கோல்கத்தா.
மண்டலம் IV அதிக இடர். தில்லி, பாட்னா, மும்பை, அகமதாபாத்.
மண்டலம் V மிக அதிக இடர். சாமோலி, அரிதுவாரம், உள் இமாலயப் பகுதி.
20. இந்தியாவில் நில நடுக்க ஆராய்ச்சிக்காக உள்ள அமைப்புகள் யாவை?
1. இந்தியப் புவி அமைப்பியல் அளவை. மிகப் பழமை யானது. இதன் இயக்குநராக இருந்தவர் ஒல்டுகாம்.
2. இந்திய வானிலை இயல் துறை.
3. தேசிய இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம். இவை மூன்றும் மைய அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலநடுக்கம் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நிலநடுக்கம், ஏற்பட்டது, கோய்னா, இறந்தவர், எப்பொழுது, மண்டலம், யாவை, இடர், அளவெண், பேர்